Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வங்காள விரிகுடாவில் மாயமான மலேசிய ஏர்லைன்ச் MH370 விமானத்தின் பாகங்கள் வங்காள விரிகுடாவில் கண்டு பிடிக்கப் பட்ட சேதமடைந்த பாகங்களாக இருக்கலாம் என்று அவுஸ்திரேலிய கடற்படை தேர்தல் நிறுவனமான GeoResonance சமீபத்தில் அறிவித்திருந்தது.

எனினும் இதனை உறுதி செய்ய முடியாதென இந்து சமுத்திரத்தில் மாதக் கணக்கில் தேடுதல் வேட்டை நடத்தி வரும் சர்வதேச நாடுகளின் தேடல் ஒருங்கிணைப்புக் கழகம் தெரிவித்துள்ளது.

இதற்குக் காரணமாக உலக நாடுகள் தற்போது தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வரும் இந்து சமுத்திரப் பகுதியில் இருந்து விமானப் பாகங்கள் கண்டு பிடிக்கப் பட்டதாகக் கூறப்படும் வங்காள விரிகுடா சில ஆயிரக் கணக்கான மைல்கள் தொலைவில் அமைந்திருப்பது கூறப்படுகின்றது. இதேவேளை மாயமான MH370 விமானத்தினை ஆகாய மார்க்கமாகத் தேடி வந்த சுமார் 600 இராணுவ உறுப்பினர்கள் தமது தேடுதலை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளனர். ஆயினும் சர்வதேச கடற்படைத் தேடல் 60 000 சதுர கிலோமீட்டருக்கும் கடல் மேற்பரப்பில் விரிவாக்கப் பட்டுள்ளது. இந்நிலையில் GeoReasonance நிறுவனத்தின் சமீபத்திய தகவலை சர்வதேச பங்குதாரர்களுடன் இணைந்து உறுதி செய்யவுள்ளதாக மலேசிய அரசும் அறிவித்துள்ளது.

இதேவேளை MH370 விமானத்தின் விபத்தால் மிகவும் மன அழுத்தத்துக்கு ஆளாகி இருக்கும் பயணிகளின் உறவினர்களுக்கு இதற்கு முன் சமர்ப்பிக்காதிருந்த புதிய ஒலிப்பதிவை மலேசிய அதிகாரிகள் போட்டுக் காட்டியுள்ளனர். இது கட்டுப்பாட்டு நிலையத்துக்கு குறித்த விமானத்தின் பைலட் அல்லது வேறு ஏதாவது ஒரு crew உறுப்பினர் கடைசியாக அனுப்பிய செய்தியாகும். இந்த ஒலி அலையின் ஆங்கில வடிவம் கீழே:

"Malaysia three seven zero contact Ho Chi Minh 120.9, good night

0 Responses to MH370 விமானத்தின் பாகங்கள் வங்கக் கடலில் கண்டுபிடிப்பு?:சர்வதேச தேடல் ஒருங்கிணைப்புக் கழகம் மறுப்பு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com