Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இன்றைய ராசி பலன் 13-05-2014 | Raasi Palan 13-05-2014

பதிந்தவர்: தம்பியன் 13 May 2014

மேஷம்
விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்திணையும் நாள். நல்லவர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். செல்வாக்கைக் காப்பாற்றி உறவினர்களின் பாராட்டுக் களைப் பெறுவீர்கள். தொல்லை தந்தவர்கள் விலகுவர்.

ரிஷபம்
பொதுவாழ்வில் புகழ்கூடும் நாள். தொலை பேசி வழித்தகவல் தொழிலுக்கு உறுதுணை புரியும். நீண்ட நாட்களாக நிலவிய கடன்தொல்லை அகல வழி பிறக்கும். சுறுசுறுப்புடன் முக்கிய வேலை களைச் செய்து முடிப்பீர்கள்.

மிதுனம்
இல்லம் தேடி இனிய செய்திகள் வந்து சேரும் நாள். உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். செய்தொழிலில் சிறப்புகள் வந்து சேரும். பழைய சம்பவங்களை நினைத்து பார்ப்பீர்கள்.

கடகம்
அடிப்படை வசதிகளைப் பெருக்கிக் கொள்ளும் நாள். ஆக்கபூர்வமான செயலொன்றைச் செய்து முடிப்பீர்கள். வாகன மாற்றம் செய்யும் எண்ணம் மேலோங்கும். தாய்வழி உறவினர் களால் தனலாபம் வந்து சேரும்.

சிம்மம்
சந்தோஷம் அதிகரிக்கும் நாள். வெளி யுலகத் தொடர்பு விரிவாகும். உயர்வான சிந்தனைகள் மனதில் தோன்றும். வீட்டைப் பராமரிக்கும் எண்ணம் மேலோங்கும். தொழில் முன்னேற்றத்திற்கு பெண்வழி ஒத்துழைப்பு கிடைக்கும்.

கன்னி
கொடுத்த வாக்கைக் காப்பாற்றி மகிழும் நாள். பண வரவு இரு மடங்காகும். பக்கபலமாக இருப்ப வர்களின் எண்ணிக்கை உயரும். உத்தியோகம் சம்பந்தமாக எடுத்த முயற்சி வெற்றி பெறும்.

துலாம்
வளர்ச்சி அதிகரிக்கும் நாள். எடுத்த காரியத்தை எளிதில் செய்து முடிக்க இல்லத்தாரின் ஒத்துழைப்பு கிடைக்கும். உடல்நலம் சீராக மாற்று மருத்துவத்தை மேற்கொள்வீர்கள். வரவும் செலவும் சமமாகும்.

விருச்சகம்
அதிர்ஷ்ட வாய்ப்புகள் அரங் கேறும் நாள். பயணங்களால் பலன் உண்டு. பணவரவு திருப்தி தரும். பக்கபலமாக இருக்கும் நண்பர்கள் விலகினாலும் புதியவர்கள் வந்திணைவர்.

தனுசு
இயல்பான வாழ்க்கையில் இன்பங்கள் அதிகரிக்கும் நாள். பயண வாய்ப்புகள் கைகூடுவதற் கான அறிகுறிகள் தோன்றும். நீண்ட நாள் நினைத்த காரியம் ஒன்று நிச்சயமாக நடைபெறும்.

மகரம்
காரியங்கள் துரிதமாக நடை பெறும் நாள். கடமையில் கண்ணும், கருத்துமாக இருப்பீர்கள். தொகை எதிர்பார்த்தபடியே வந்து சேரும். குடும்பத்தில் குதூகலம் தரும் சம்பவமொன்று நடைபெறலாம்.

கும்பம்
தைரியத்தோடு செயல்பட்டு சாதனைகள் படைக்கும் நாள். நீண்ட நாட் களாக வாங்க நினைத்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வரவேண்டிய பணவரவுகள் வந்து சேரும். உறவினர் வழியில் சிறு தொகை செலவாகலாம்.

மீனம்
கடவுள் வழிபாட்டால் காரியங்களில் வெற்றி கிடைக்கும் நாள். எதையும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்துச் செய்வது நல்லது. வீண் விரயங்களைத் தவிர்க்க வீடு, நிலம் போன்றவற்றை வாங்குவதில் கவனம் செலுத்துவீர்கள்.

0 Responses to இன்றைய ராசி பலன் 13-05-2014 | Raasi Palan 13-05-2014

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com