தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரனிடம் பயங்கரவாதத் தடுப்பு பிரிவினர் நேற்று திங்கட்கிழமை மாலை விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
முல்லைத்தீவின் கள்ளப்பாடு பகுதியில் அமைந்துள்ள து.ரவிகரனின் வீட்டிற்கு நேற்று மாலை சென்ற பயங்கரவாத தடுப்பு பிரிவினர் “நீங்கள் விடுதலைப் புலி உறுப்பினரா?, உங்களுக்கு பயங்கரவாதிகளுடன் தொடர்புள்ளதா?, நீங்கள் யார், எந்தக் கட்சியினை சேர்ந்தவர்?” என்ற கேள்விகளை முன்வைத்து அவரிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள து.ரவிகரன், “நிமிர்ந்து நிற்கும் தமிழனை பயங்கரவாதியாக அடையாளப்படுத்துவதையே பயங்கரவாத தடுப்பி பிரிவினரின் இந்த விசாரணை காட்டுகிறது. தமிழ் மக்களின் வாக்குகளால் தெரிவு செய்யப்பட்ட என் மீது நடைபெறும் விசாரணைகள் இலங்கையில் ஜனநாயகத்தின் நிலையை வெளிச்சம் போட்டுக்காட்டுகிறது.
என்னுடைய வீட்டிற்கு நேற்று மாலை 3.30 மணியளவில் வருகை தந்த நால்வரால் கிட்டத்தட்ட 30 நிமிடங்கள் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அவர்களை உறுதிப்படுத்துமாறு கேட்டபொழுது, ஒருவர் பயங்கரவாத தடுப்பு பிரிவு எனக்குறிப்பிடப்பட்ட அடையாள அட்டையையும், மற்றையவர்கள் இலங்கை பொலிஸ் என்று அடையாளப்படுத்தப்பட்ட ஆவணத்தையும் காண்பித்தனர்.
இவ்விசாரணை இப்பொழுது இடம்பெறுவதற்கான காரணம் என்ன என்று கேட்ட பொழுது, நாம் கிளிநொச்சி அலுவலகத்தில் இருந்து வருகிறோம். இது கொழும்பில் இருந்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கமையவே நடைபெறுகிறது என்று கூறி, என்னைப்பற்றியும், எனது குடும்ப அங்கத்தவர்கள் தொடர்பிலும் விபரங்களை கேட்டு பதிவு செய்து கொண்டு மேலும் சில கேள்விகளை கேட்டுவிட்டு அவசியம் ஏற்படின் மீண்டும் தொடர்பு கொள்கிறோம் என்று கூறிச்சென்றார்கள்.
நாம் இன்று மக்களின் எதிர்பார்ப்புகளை சுமந்து கொண்டு களத்தில் நிற்கும் மக்களின் பிரதிநிதிகள். மக்களின் இன்னல்களையும் இடர்களையும் அகற்ற முனைய வேண்டியது எமது கடமை. தென்னிலங்கை இனச்சுத்திகரிப்பு அரசியலுக்கு முரணாக நாம் குரல் கொடுப்பதற்கு எத்தனை தடைகள் இடையூறுகள் வரினும் எம் மக்களின் சுதந்திரமான வாழ்வுக்காக தொடர்ந்தும் போராடுவோம்” என்றார்.
இறுதி மோதல் களமான முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த மக்களுக்கான நினைவாலயம் அமைக்கக்கோரி கடந்த பெப்ரவரி மாதம் வடக்கு மாகாண சபையில் து.ரவிகரனால் முன்வைக்கப்பட்ட பிரேரணை, சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. அப்போது, அது தொடர்பில் இலங்கை பாராளுமன்றத்தில் பெரும்பான்மையின அரசியல் தலைவர்களால் எதிர் வாதங்கள் முன்வைக்கப்பட்டிருந்தன. இந்த நிலையிலேயே, மே 18 இற்கு இன்னும் ஒரு சில நாட்களே உள்ள நிலையில் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் து.ரவிகரன் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

0 Responses to வடக்கு மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரனிடம் பயங்கரவாதத் தடுப்பு பிரிவினர் விசாரணை!