Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இன்றைய ராசி பலன் 16-05-2014 | Raasi Palan 16-05-2014

பதிந்தவர்: தம்பியன் 16 May 2014

மேஷம்
சிந்தித்து செயல்பட்டு சிறப்புகளைக் காணவேண்டிய நாள். தாய்வழி அனுகூலம் உண்டு. வங்கிகளில் வைப்பு நிதியை உயர்த்தும் எண்ணம் மேலோங்கும். உடல்நலத்தில் கவனம் தேவை.

ரிஷபம்
குழப்பங்கள் தீர வழிபாட்டை மேற்கொள்ள வேண்டிய நாள். அடுத்தவர் நலனில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். உற்றார் உறவினர்களால் சுபவிரயங்கள் அதிகரிக்கலாம்.

மிதுனம்
காலை நேரத்திலேயே கலகலப்பான செய்தி வந்து சேரும் நாள். மாற்று மருத்துவத்தால் உடல் நலம் சீராகும். மங்கல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மகிழ்வீர்கள். வீட்டைப் பராமரிக்கும் எண்ணம் மேலோங்கும்.

கடகம்
விருந்தினரை வரவேற்று வியப்படையும் நாள். மற்றவர்களுக்காக எடுத்த முயற்சி கைகூடும். குழந்தைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்து மகிழ்வீர்கள். உத்தியோக அனுகூலம் உண்டு.

சிம்மம்
சுற்றத்தார் வரவால் சுகம் கூடும் நாள். அடுத்தவர் நலனில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழும் வாய்ப்பு உண்டு¢. வீடு தேடி வரன்கள் வந்து சேரலாம்.

கன்னி
தைரியத்தோடும், தன்னம்பிக்கையோடும் செயல்படும் நாள். எடுத்த செயலை எளிதில் முடித்து வெற்றி காண்பீர்கள். உடன்பிறப்புகள் உங்களுக்கு உதவிக்கரம் நீட்ட முன்வருவர். வருமானம் திருப்தி தரும்.

துலாம்
எதிர்பாராத தனலாபம் இல்லம் தேடி வரும் நாள். பெரிய மனிதர்களின் ஒத்துழைப்பு கிட்டும்.விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். புதிய பதவிகளும், பொறுப்புகளும் வந்து சேரலாம்.

விருச்சகம்
விழாக்களில் கலந்து கொண்டு மகிழும் நாள். பணவரவு திருப்தி தரும். நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். பயணத்தால் பலன் கிடைக்கும்.

தனுசு
தாராளமாகச் செலவிட்டு மகிழும் நாள். உத்தியோகத்தில் எதிர்பாராத விதத்தில் இடமாற்றம், ஊர்மாற்றங்கள் வந்து சேரலாம். நண்பர்கள் வழியில் சிறு விரயம் ஏற்படும்.

மகரம்
மனதிற்கினிய சம்பவங்கள் நடைபெறும் நாள். திட்டமிட்ட காரியங்கள் அனைத்தும் நடைபெற்று மகிழ்ச்சியைக் கூட்டும். தொழில் ரீதியாக புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும்.

கும்பம்
உறவினர் வருகையால் உற்சாகம் காணும் நாள். கொடுத்தவாக்கைக் காப்பாற்றி மகிழ்வீர்கள். அலுவலகப் பணிகள் துரிதமாக நடைபெறும். வீடு, இடம் வாங்கிச் சேர்க்கும் எண்ணம் மேலோங்கும்.

மீனம்
எதிரிகள் விலகும் நாள். சுணங்கிய காரியங்கள் சுறுசுறுப்பாக நடைபெறும். தொழில் ரீதியான பயணம் ஒன்றை மேற்கொள்வீர்கள். உத்தியோகத்தில் உடன் இருப்பவர்களால் உபத்திரவம் ஏற்பட்டு விலகும்.

0 Responses to இன்றைய ராசி பலன் 16-05-2014 | Raasi Palan 16-05-2014

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com