Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கையின் மோதல் காலங்களில் காணாமற்போனதாக அறிக்கையிடப்பட்டுள்ளோர் பட்டியலில் இருந்து 90 வீதமானவர்களின் பெயர்களை நீக்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக இராணுவ மற்றும் பாதுகாப்புத் தரப்பின் ஊடகப் பேச்சாளர் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார்.

காணாமற்போனதாக அறிக்கையிடப்பட்டுள்ளவர்களில் அநேகமானவர்கள், வெளிநாடுகளில் சுகபோக வாழ்க்கை நடத்தி வருகின்றனர். அவர்கள் தொடர்பில் சர்வதேச நாடுகளிடம் விபரம் கோரியுள்ளோம். அந்த விபரங்கள் கிடைக்கும் பட்சத்தில் 90 சதவீதமானவர்களின் பெயர்கள், காணாமற்போனோர் பட்டியலில் இருந்து நீக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் மோதல்கள் நீடித்த காலத்திலும், அதன் பின்னரும் வடக்கு கிழக்கைச் சேர்ந்தவர்கள் சட்டவிரோத வழிகளை கையாண்டு மேற்குலக நாடுகளில் தஞ்சமடைந்து வருகின்றனர். இதனை மறைக்கும் வகையில் மோதல்களின் போது பலர் காணாமற்போனதாக பட்டியல் தயாரிக்கப்பட்டு சர்வதேசத்தின் மத்தியில் இலங்கை அரசாங்கத்துக்கும், படையினருக்கும் அவப்பெயரையும், களங்கத்தையும் ஏற்படுத்துகின்றனர் என்று ருவான் வணிகசூரிய மேலும் கூறியுள்ளார்.

0 Responses to காணாமற்போனோர் பட்டியலில் இருந்து 90 வீதமானவர்களின் பெயர்கள் நீக்கப்படும்: இராணுவம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com