Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இன்றைய ராசி பலன் 20-05-2014 | Raasi Palan 20-05-2014

பதிந்தவர்: தம்பியன் 20 May 2014

மேஷம்
அடிப்படை வசதிகளைப் பெருக்கிக் கொள்ளும் நாள். வாக்குறுதியைக் காப்பாற்றி மகிழ்வீர்கள். வெளிவட்டாரத் தொடர்பு விரிவடையும். செய்யும் தொழிலில் மேன்மையும், உயர்வும் கிட்டும்.

ரிஷபம்
உதவிக்கரம் நீட்டுபவர்களின் எண்ணிக்கை உயரும் நாள். தக்க சமயத்தில் நண்பர்கள் கைகொடுத்து உதவுவர். வேலைப்பளு குறையும். தந்தை வழி உறவினர்களால் ஏற்பட்ட தகராறுகள் அகலும்.

மிதுனம்
இன்பங்கள் வந்து சேர இறை வழிபாட்டை மேற்கொள்ள வேண்டிய நாள். பேச்சில் நிதானம் தேவை. தொழில் கூட்டாளிகளை அனுசரித்துச் செல்வது நல்லது. குடும்பத்தில் திடீர் செலவுகள் ஏற்பட்டு அகலும்.

கடகம்
விலகிச் சென்ற சொந்தங்கள் விரும்பி வந்து சேரும் நாள். காலை நேரத்திலேயே கலகலப்பான செய்திகள் வந்து சேரும். குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து மகிழும் வாய்ப்பு உண்டு.

சிம்மம்
பாக்கிகள் வசூலாகிப் பரவசப்படுத்தும் நாள். எந்தச் செயலையும் சிந்தித்து முடிவெடுப்பது நல்லது. உடல் நலம் சீராக மாற்று மருத்துவத்தை மேற்கொள்ளும் சூழ்நிலை உண்டு. உங்களின் நானயமான பேச்சிற்கு மதிப்பு கிடைக்கும்.

கன்னி
முத்தான வாய்ப்புகள் இல்லம் வந்து சேரும் நாள். பிள்ளைகள் நலனில் அதிக அக்கறை காட்டுவீர்கள். சுப காரியப் பேச்சுக்கள் நல்ல முடிவிற்கு வரும். தன வரவு திருப்தி தரும். தாய் வழி ஆதரவு பெருகும்.

துலாம்
வியாபார விரோதங்கள் விலகும் நாள். பெரிய மனிதர்களின் சந்திப்பு கிடைத்து மகிழ்வீர்கள். வீடு கட்டும் முயற்சிக்கு வித்திடுவீர்கள். பாதியில் நின்ற பணிகளை உற்சாகத்தோடு செய்து முடிப்பீர்கள்.

விருச்சகம்
வெற்றிச் செய்திகள் வீடு வந்து சேரும் நாள். உடன் பிறப்புகள் உதவிக்கரம் நீட்ட முன்வருவர். வருமானம் எதிர்பார்த்த படியே வந்து சேரும். கடல் தாண்டி வரும் செய்தி காரிய வெற்றிக்கு உறுதுணையாக இருக்கும்.

தனுசு
பொதுநல ஈடுபாடு அதிகரிக்கும் நாள். பொல்லாதவர்கள் உங்களை விட்டு விலகுவர். ஊக்கத்தோடும், உற்சாகத்தோடும் பணிபுரிந்து உயரதிகாரிகளின் பாராட்டுக்களைப் பெறுவீர்கள்.

மகரம்
வாக்கு சாதுர்யத்தால் வளம் காணும் நாள். தொல்லை தந்தவர்கள் எல்லையை விட்டு விலகுவர். வாங்கல்-கொடுக்கல்கள் ஒழுங்காகும். வெளிவட்டாரத் தொடர்பு விரிவடையும்.

கும்பம்
திடீர் பயணங்களால் தித்திக்கும் செய்தி வந்து சேரும் நாள். மாற்றங்களால் ஏற்றம் காண்பீர்கள். விருந்தினர் வருகையால் செலவுகள் அதிகரிக்கும். மற்றவர்களின் விமர்சனங்களை மறந்து வாழ்வது நல்லது.

மீனம்
புதிய பொறுப்புகளும், பதவிகளும் வந்து சேரும் நாள். லாபம் இரட்டிப்பாகும். நல்லவர்கள் நாடி வந்து உதவி செய்வர். தொலைதூர பயண வாய்ப்புகள் கைகூடுவதற்கான அறிகுறிகள் தோன்றும்.

0 Responses to இன்றைய ராசி பலன் 20-05-2014 | Raasi Palan 20-05-2014

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com