Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நைஜீரியாவில் இரு வாரங்களுக்கு முன் போக்கோ ஹராம் தீவிரவாதிகளால் கடத்தப் பட்ட 270 மாணவிகளில் 220 பேர் இன்னமும் அவர்களின் பிடியில் இருக்கும் நிலையில் இம்மாணவிகள் முற்போக்கு இஸ்லாமியத் தீவிரவாதிகளைத் திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தப் பட்டு வருவதாக புதன்கிழமை பொதுமக்கள் சமூகப் பாதுகாப்புக் குழு அதிர்ச்சி தரும் அறிக்கையை வெளியிட்டுள்ளது.

இரு வாரங்களுக்கு முன்னர் நைஜீரியத் தலைநகர் அபுஜாவில் குண்டு வெடித்து 75 பொது மக்கள் பலியான சம்பவம் நடைபெற்று சில மணி நேரத்தில் போர்னோ மாநிலத்தின் சிபோக் நகரில் போக்கோ ஹராம் தீவிரவாதிகள் 200 இற்கும் அதிகமான பள்ளி மாணவிகளை துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றனர். இதன் போது குறைந்தது 50 பள்ளி மாணவிகள் கடத்தப் பட்ட டிரக் வண்டிகளில் இருந்து தப்பி வந்தனர். மேலும் கடத்தப் பட்ட மாணவிகளை விடுவிப்பதற்கு நைஜீரியா சர்வதேசத்தின் உதவியை நாடியது.

இந்நிலையில் குறித்த மாணவிகளின் பெற்றோர்கள் தமது பிள்ளைகள் போக்கோ ஹராம் தீவிரவாதிகளை வெறும் 2000 நைரா ($12) அதாவது 12 டாலர்களுக்குத் திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தப் படுவதாகக் கூறிய கூற்றினை மேற்கோள் காட்டி AP ஊடகத்துக்கு போர்னோ-யோபே பொதுமக்கள் கருத்துக் கணிப்பு தகவல் அளித்துள்ளது. இவ்விபரத்தை போக்கோ ஹராம் தீவிரவாதிகள் மறைந்து வாழும் நைஜீரிய கமெரூன் எல்லையிலுள்ள சம்பிஷா வனப் பகுதியில் உள்ள கிராமத்தவர்களிடம் இருந்து கடத்தப் பட்ட மாணவிகளின் பெற்றோர்கள் அறிந்துள்ளனர்.

உடனடியாக உறுதிப் படுத்தப் பட முடியாத இந்த அறிக்கையின் புதிய தகவல்கள் கடத்தப் பட்ட மாணவிகள் எல்லைகளைக் கடந்து கமெரூன் மற்றும் சாட் ஆகிய நாடுகளுக்கு இரகசியமாக நாடு கடத்தப் பட்டிருக்கலாம் எனக் கூறுவதுடன் இம்மாணவிகள் அனைவரும் 16 இலிருந்து 18 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. நைஜீரியாவில் இவ்வருடத் தொடக்கம் முதல் போக்கோ ஹராம் தீவிரவாதிகள் தொடுத்த தாக்குதலில் குறைந்தது 1500 பொது மக்கள் கொல்லப் பட்டுள்ளனர்.

0 Responses to நைஜீரியாவில் கடத்தப்பட்ட மாணவிகள் தீவிரவாதிகளைத் திருமணம் செய்யுமாறு வற்புறுத்தல்!:அதிர்ச்சியூட்டும் அறிக்கை

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com