Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சென்னையில் ஆவடி ரயில் நிலையம், வணிக வளாகம், தனியார் கல்லூரி என்று அடுத்தடுத்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு, வெடிகுண்டு நிபுணர்கள் அலைக்கழிக்கப்பட்டு வருகின்றனர்.

நேற்று சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு வெடித்ததை அடுத்து, ஆவடி ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக மர்ம நபர் தொலைபேசியில் மிரட்டல் விடுத்துள்ளனர். இதை அடுத்து அங்கு பதற்றம் நிலவி வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தீவிர சோதனையில் ஈடுப்பட்டனர். ஆனால், தீவிர தேடலுக்குப் பிறகு இது வெறும் புரளி என்று கண்டறியப்பட்டது.

இந்நிலையில் சென்னையின் பெரிய வணிக வளாகமான எக்ஸ்பிரஸ் அவென்யூவில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் வந்தது என்று வெளிவந்த தகவலை அடுத்து  அங்கு தற்போது வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனையில் ஈடுப்பட்டுள்ளனர். மக்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டு ஒவ்வொரு இடத்திலும் சோதனை நடைபெற்று வருவதாகத் தெரிகிறது. இதற்குள் சென்னை தியாகராய நகரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் தற்போது வெடிக்குண்டு இருப்பதாக வந்த மிரட்டலை அடுத்து அங்கும் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தி வருகின்றனர்.

0 Responses to சென்னை வெடிகுண்டு மிரட்டல்: அலைக்கழிக்கப்படும் வெடிகுண்டு நிபுணர்கள்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com