சென்னையில் குண்டுவெடிப்புத் தொடர்பான விசாரணைக்கு மத்திய அரசின் உதவித் தேவையில்லை என்று, தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நேற்று காலை கவுஹாத்தி ரயில் வந்து நின்றபோது ரயிலின் இரண்டு பெட்டிகளில் இரண்டு குண்டுகள் வெடித்தன. இதுத் தொடர்பான விசாரணைக்கு மத்திய உள்துறை அமைச்சகம் புலனாய்வுத் துறையை அனுப்ப முடிவு செய்திருந்த நிலையில், மத்திய அரசின் உதவி மாநில அரசுக்குத் தேவையில்லை என்று கூறியுள்ளார் முதல்வர் ஜெயலலிதா.
இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தை சட்டத்துக்குப் புறம்பாக வெடிக்குண்டு வைத்திருந்தது, பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தது போன்ற குற்றவியல் தண்டனை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த விவகாரத்தை மாநில அரசு கவனித்துக் கொள்ளும் என்றும் கூறியுள்ள முதல்வர் ஜெயலலிதா, இவ்வழக்கு தீவிரவாதிகள் சதி என்கிற அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார். இதை அடுத்து மத்திய அரசு அனுப்பவிருந்த விசாரணை அதிகாரிகளை நிறுத்திக் கொண்டது என்பதுக் குறிப்பிடத் தக்கது.

0 Responses to மத்திய அரசின் உதவி தேவையில்லை:ஜெயலலிதா