16 புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மீது இலங்கை அரசாங்கம் அண்மையில் விதித்த தடையினை அமுல்படுத்தப் போவதில்லை என்று அறிவித்துள்ள கனடா, அந்த அமைப்புக்கள் தமது நாட்டில் சட்டரீதியாக செயற்பட முடியும் என்று தெரிவித்துள்ளது.
பயங்கரவாத அமைப்புக்களுடன் தொடர்பிருப்பதாக தெரிவித்து கடனாவுடன் உறவுகளைப் பேணிவரும் சில அமைப்புக்கள் உள்ளிட்ட 16 புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மற்றும் 424 பேரின் மீது இலங்கை அரசாங்கம் தடைகளை விதித்தது.
ஆனாலும், இலங்கையின் தடை கனடாவில் சட்டபூர்வமாக தாக்கம் செலுத்தாது என்றும், எனவே, குறித்த அமைப்புக்களும், நபர்களும் சட்டரீதியாக செயற்பட முடியும் என்றும் கனடாவின் வெளிவிவகார அமைச்சர் ஜோன் பெயர்ட்டும், இராஜாங்க அமைச்சர் லைனே ஜெலிச்சும் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

0 Responses to புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மீதான இலங்கையின் தடையை அமுல்படுத்தப் போவதில்லை: கனடா