Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கை அரசாங்கம் புலம்பெயர்ந்த அமைப்புகள் மீது விதித்துள்ள தடையை தாங்கள் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்று கனடா திட்டவட்டமாக அறிவித்துள்ளது. இலங்கை அரசாங்கத்தினால் தடை செய்யப்பட்ட புலம்பெயர் தமிழ் அமைப்புக்களினால் கனடாவில் பாதிப்பு ஏற்படாது என கனேடிய வெளிவிவகார அமைச்சர் ஜோன் பெயார்ட் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்:

புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மீது இலங்கை அரசாங்கம் விதித்துள்ள தடையானது நல்லிணக்க முனைப்புக்களை மேலும் பாதிக்கும்.

16 புலம்பெயர் அமைப்புக்களையும், 424 தனிப்பட்ட நபர்களையும் இலங்கை அரசாங்கம் தடை செய்துள்ளமை குறித்து கவனம் செலுத்தி வருவகின்றோம். தடை செய்யப்பட்ட அமைப்புக்கள் மற்றும் தனிப்பட்ட நபர்கள் கருத்துக்களை வெளியிட கனடாவில் எவ்வித தடையும் கிடையாது. எனினும் இலங்கையினால் தடைப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள கனேடியர்களிடம் கேள்வி எழுப்பபடும்.

யுத்தத்தின் பின்னரான நல்லிணக்க முனைப்புக்களில் புலம்பெயர் தமிழ் மக்கள் முக்கிய பங்காற்றி வருகிறார்கள் என கனேடிய வெளிவிவகார அமைச்சர் ஜோன் பெயார்ட் மேலும் கருத்து வெளியிட்டுள்ளார்.

பயங்கரவாதத்திற்கு எதிரான சகல நடவடிக்கைகளும் சர்வதேச சட்டங்களுக்கு மதிப்பளிக்கும் வகையில் இலங்கை அரசாங்கம் எடுக்க வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சகலவிதமான பயங்கரவாத செயற்பாடுகளையும் கனடா எதிர்ப்பதாக அமைச்சர் ஜோன் பெயார்ட் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to இலங்கை அரசாங்கத்தின் புலம்பெயர் தமிழ் அமைப்புகளினால் கனடாவில் பாதிப்பு ஏற்படாது - கனேடிய வெளிவிவகார அமைச்சர்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com