இலங்கைக்கு எதிராக இந்தியாவின் புதிய அரசாங்கம் செயற்படுவதற்கு முன்னர், இலங்கை அரசாங்கம் முந்திக்கொள்ள வேண்டும் என்று ஆங்கில பத்திரிகை ஒன்று அறிவுறுத்தியுள்ளது.
குறித்த பத்திரிகை இன்றைய தமது ஆசிரிய தலையங்கத்தில் இந்த விடத்தை தெரிவித்துள்ளது.
இந்தியாவில் மிகப்பெரிய பெரும்பான்மையுடன் இந்திய மத்திய அரசாங்கம் அமைக்கப்படுகிறது.
பாரதீய ஜனதா கட்சியின் பிரதம வேட்பாளர் நரேந்திர மோடி பிரதமராக பதவி ஏற்கிறார்.
மறுபக்கம் 95 சதவீதமான ஆசனங்களைக் கைப்பற்றி, தமிழகத்தின் ராணியாக ஜெயலலிதா தம்மை அடையாளப்படுத்திக் கொண்டுள்ளார்.
இந்த நிலையில் அவர்கள் இருவரும் இலங்கைக்கு எதிராக மிகவும் கடினமான முன்னெடுப்புகளை மேற்கொள்ளலாம்.
அதற்குள் நரேந்திரமோடியை சமாளிப்பதற்கான வியூகங்களை இலங்கை அரசாங்கம் தயார்படுத்த வேண்டும் என்று அந்த பத்திரிகை தெரிவித்துள்ளது.
அவ்வாறு இலங்கை அரசாங்கம் தயாராகாத பட்சத்தில், ரஷ்யாவின் ஜனாதிபதி விளாட்டிமீர் புட்டின், யுக்ரெயின் - கிரைமியாவில் செயற்பட்டதைப் போன்று, ஜெயலலிதாவும், நரேந்திர மோடியும் இலங்கை விடயத்தில் செயற்படும் நிலை ஏற்பட்டுவிடலாம் என்று அந்த பத்திரிகை எச்சரித்துள்ளது.

0 Responses to கிரைமியாவில் புட்டின் போன்று, இலங்கையில் மோடியும், லேடியும் செயற்படலாம்!