பிசிசிஐ தலைவராக நீடிக்க ஸ்ரீனிவாசன் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுப்படி செய்துள்ளது.
பிசிசிஐ தலைவராக இருந்த ஸ்ரீனிவாசன் தமது பதவியில், நடந்து முடிந்த 6 வது ஐபிஎல் சூதாட்டம் தொடர்பான வழக்கின் காரணமாக நீடிக்க முடியாமல் போனது. இதனையடுத்து வழக்கு முடியும் வரை ஸ்ரீனிவாசன் பதவியைத் திரும்பப் பெற முடியாது என்றும் உச்ச நீதிமனறம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில் ஸ்ரீனிவாசன் தாம் பதவியைத் தொடர வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு இரண்டு முறை தள்ளுப்படியானது.
இந்நிலையில் மீண்டும் தாம் பதவியைத் தொடர வேண்டும் என்று ஸ்ரீனிவாசன் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனு இன்று விசாரனைக்கு வந்தது. மனுவை விசாரித்த விடுமுறைக்கால அமர்வு நீதிபதிகள் மனுவைத் தள்ளுப்படி செய்துள்ளனர்.

0 Responses to பிசிசிஐ தலைவராக நீடிக்க ஸ்ரீனிவாசன் தாக்கல் செய்த மனுத் தள்ளுபடி!: உச்ச நீதிமன்றம்