இறுதி மோதல் களமான முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு வடக்கு மாகாண சபையின் இன்றைய அமர்வின் போது இடம்பெற்றுள்ளது.
அத்தோடு, ஆளும் கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் அனைவரும் கறுப்புப் பட்டி அணிந்தே சபை அமர்வுகளில் கலந்து கொண்டிருந்தனர். ஆனாலும், எதிர்க் கட்சித் தலைவர் எஸ்.தவராசா வெளி நடப்புச் செய்தார்.
வடக்கு மாகாண சபையின் மாதாந்த அமர்வு இன்று வியாழக்கிழமை காலை கைதடியில் அமைந்துள்ள பேரவை மண்டபத்தில் ஆரம்பமானது. இதன்போதே முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களுக்கு மெழுகுதிரி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இன்றைய அமர்வுகளில் தாமதமாக சமூகமளித்திருந்தார். அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் சபைக்கு சமூகமளித்திருக்கவில்லை.

0 Responses to வடக்கு மாகாண சபையில் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி அனுஷ்டிப்பு!