இந்திய மக்களவைத் தேர்தலில் நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதாக் கட்சி பெற்றுள்ள பெருவெற்றியை ஈழத்தமிழர்களும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் வரவேற்பதாக அந்தக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும், ஊடகப் பேச்சாளருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, தமிழகத்தில் வெற்றி பெற்றுள்ள முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராம் தலைமையிலான அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தன்னுடைய வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளது.
இந்திய மக்களவையில் அறுதிப் பெரும்பான்மையை பெற்று வெற்றி பெற்றுள்ள நரேந்திர மோடி, இலங்கை தமிழர் பிரச்சினைக்கு ஒரு நியாயமான தீர்வைக்காண உதவுவார் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு நம்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய மத்திய அரசின் இலங்கை தமிழர் குறித்த கொள்கையில் சாதகமான மாற்றங்களை கொண்டுவர மோடி அரசாங்கமும், தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராம் தலைமையிலான மாநில அரசாங்கமும் உதவும் என்று சுரேஷ் பிரேமச்சந்திரன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

0 Responses to மோடி - ஜெயலலிதாவின் வெற்றியை ஈழத்தமிழ் மக்கள் வரவேற்கிறார்கள்: கூட்டமைப்பு