Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இந்திய மக்களவைத் தேர்தலில் பெருவெற்றி பெற்று பிரதமராக பதவியேற்கவுள்ள நரேந்திர மோடிக்கு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

அதில், ‘உங்கள் (மோடி) தலைமையில் பாரதிய ஜனதா கட்சி கண்டிருக்கும் இந்த மகத்தான தேர்தல் வெற்றி, இந்தியத் தேர்தல் வரலாற்றில் ஒரு சாதனை எனலாம். பலம்பொருந்திய ஒரு அரசாங்கத்தை அமைக்கப்போகும் நீங்கள் ஈழத் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு அரசியல் இணக்கத் தீர்வொன்றினைக் காண்பதற்கான உத்வேகத்தை ஏற்படுத்தக்கூடிய பயனுறுதியுடைய பங்களிப்பை வழங்குவீர்கள் என தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்றார்கள்.

ஈழத் தமிழ் மக்களுக்கு நீதிகிட்ட உங்கள் தலைமையிலான அரசாங்கம் ஆரோக்கியமான கொள்கை அணுகுமுறையைக் கடைப்பிடிக்கும் என நான் நம்பிக்கையுடன் எதிர்பார்க்கின்றேன்” என்று தன்னுடைய வாழ்த்துச் செய்தியில் வடக்கு மாகாண முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to ஈழத் தமிழர்களின் பிரச்சினைக்கு தீர்வுகாண உதவ வேண்டும்; மோடிக்கான வாழ்த்துச் செய்தியில் சி.வி.விக்னேஸ்வரன்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com