மோடி அலை என்பது வெறும் ஊடகங்களின் பிரச்சாரமே, உண்மையில் மோடி அலை எதுவும் வீசவில்லை எனக் கூறிவந்த காங்கிரஸ் அரசுக்கு அது உண்மைதான் என நிரூபித்துள்ளது தேர்தல் முடிவுகள். மோடி அலை வெறும் அலை அல்ல. அது சுனாமியாகிவிட்டது என்பதை பாஜகவின் பெரும்பான்மை வெற்றி நிரூபித்திருக்கிறது.
ஆனால் மோடியின் அரசியல் சுனாமிக்குள் அகப்படாமல் தப்பித்து தம்மை தற்காத்துக் கொண்ட மூன்றே மூன்று மாநிலங்கள் தமிழ்நாடு, மேற்கு வங்கம் மற்றும் ஒடிசா.
தமிழ்நாட்டில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக, மேற்கு வங்கத்தில் மமதா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ், ஒடிசாவில் நவீன் பட்நாய்க் தலைமையினான பிஜூ ஜனதா தாள் கட்சிகள் அங்கு பெரும்பான்மை வெற்றி பெற்றுள்ளன. காங்கிரஸாலோ, பாஜகவினாலோ இம்மாநிலங்களை அசைத்துவிட முடியவில்லை.
மாறாக காங்கிரஸ் மத்தியில் ஆட்சி அமைத்த போது கூட்டுச் சேர்ந்து பின்னர் விலகிய கட்சிகள், வெளியிலிருந்து ஆதரவு அளித்ரவளித்த கட்சிகள் என திமுக, சமாஜ்வாத கட்சி, பகுஜன் சமாஜ்வாத கட்சி, தேசிய காங்கிரஸ் கட்சி அனைத்தும் தோல்வி அடைந்துள்ளன.
மோடிக்கு பிரதமர் மன்மோகன் சிங் தனது வாழ்த்துகளை பகிர்ந்துள்ளார். மக்களின் தீர்ப்பை ஏற்பதாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

0 Responses to மோடி சுனாமியிலிருந்து தப்பித்த மூவர் ; ஜெயலலிதா, மம்தா பானர்ஜி, நவீன் பட்நாயக்