யாழ்ப்பாணத்தினில் முன்னெடுக்கப்படுவது இலங்கை இராணுவத்திற்கான ஆட்சேர்ப்பேயென இராணுவத்தலைமை ஏற்றுக்கொண்டுள்ளது. அவ்வகையினில் 800 இராணுவ வெற்றிடங்களை நிரப்புவதற்கு யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழ் இளைஞர் யுவதிகளை இணைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக இராணுவத்தின் ஊடக இணைப்பாளர் மல்லவாராச்சி இன்று யாழ்ப்பாணத்தினில் தெரிவித்துள்ளார்.
யாழ். சிவில் அலுவலகத்தில் இன்று காலை 9.30 மணிக்கு இடம்பெற்ற படைத்தலைமையகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே குறித்த அறிவித்தலை உத்தியோக பூர்வமாக அவர் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,யாழ்ப்பாணத்தில் தொண்டர்களாக கடமையாற்றுவதற்கு 700 தொடக்கம் 800 வெற்றிடங்கள் உள்ளன. எனவே நாம் விரும்பியவர்கள் இணைந்து கொள்ள முடியும். இதற்காக காங்கேசன்துறையில் 3 மாதங்களுக்கு பயிற்சி வழங்கப்படும். அத்துடன் பயிற்சிக் காலத்திலும் சம்பளம் வழங்கப்படும். மேலும் உணவு, இருப்பிடம், மருத்துவம், போக்குவரத்து ஆகியன இலவசமாக வழங்கப்படுவதுடன், குடும்பத்தினருக்கும் சலுகைகள் வழங்கப்படும். பயிற்சி முடிவடைந்ததும் இராணுவ தொண்டர்களாக உள்வாங்கப்பட்டு மாதாந்தம் 30 ஆயிரம் ரூபா சம்பளமும் வழங்கப்படும். இதற்கு 18 வயது தொடக்கம் 28 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.எனினும் படை அதிகாரிகளை இணைப்பதற்கு மட்டும் வர்த்தமானியில் அறிவிக்கப்படுமே ஒழிய தொண்டர்களை இணைப்பதற்கு அல்ல. இவ்வாறே தான் தெற்கிலும் தொண்டர்கள் இணைக்கப்பட்டுள்ளனர். எனினும் கடந்த காலங்களில் வடக்கில் ஆட்களை இணைப்பதற்கான சூழ்நிலை இருக்கவில்லை. எனவே தற்போது அதற்கான சூழல் ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தினில் போலி தரகர்கள் சகிதம் நடப்பது உண்மையான ஆட்சேர்ப்பில்லையென அரச அதிபர் அறிவித்திருந்த நிலையிலேயே அவசர அவசரமாக படைத்தரப்பின் இவ்வறிவிப்பு வெளியாகியுள்ளது.

0 Responses to ஆமிக்கே ஆட்பிடிப்பு! ஏற்றுக்கொண்டது இராணுவத்தலைமை!