Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

யாழ் பல்கலைக் கழகத்தின் ஆசிரியர் சங்கத் தலைவர் ஆர். இராசகுமாரன் பயங்கரவாதத் தடுப்பு பிரிவு பொலிஸாரினால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு யாழ் பல்கலை கழகத்தில் இன்று புதன்கிழமை நடத்தப்படுமென அறிவிக்கப்பட்டிருந்த நிலையிலையே, நேற்றைய தினம் பலாலியிலுள்ள யாழ் படைத் தலைமையகத்திற்கும், இன்றைய தினம் கொழும்பு பயங்கரவாதத் தடுப்பு பிரிவு பொலிஸ் தலைமையகத்துக்கும் ஆர். இராசகுமாரன் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே, யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர்கள் இருவரது பெயர்கள், யாழ் பல்கலைக்கழக பீடாதிபதிகள் மற்றும் விரிவுரையாளர்கள் சிலரதும் பெயர்கள் குறிப்பிட்டு கொலை அச்சுறுத்தல் விடுக்கும் சுவரொட்டிகள் நேற்று செவ்வாய்க்கிழமை ஒட்டப்பட்டிருந்தது சுட்டிக்காட்டத்தக்கது.

0 Responses to யாழ் பல்கலைக் கழக ஆசிரியர் சங்கத் தலைவர் பயங்கரவாதத் தடுப்பு பிரிவினரால் விசாரணைக்கு அழைப்பு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com