டெல்லி முதல்வர் ஆட்சியிலிருந்து விலகியதற்கு டெல்லி மக்களிடம் மன்னிப்புக் கோரினார் ஆம் ஆத்மிக் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் கெஜ்ரிவால்.
டெல்லி முதலமைச்சர் பதவியிலிருந்து அர்விந்த் கேஜ்ரிவால் விலகி மூன்று மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டன. ஆட்சி அமைத்த 49வது நாள் முதலமைச்சர் பதவியிலிருந்து திடீரென விலகியதற்கு அர்விந்த் கேஜ்ரிவால் தற்போது மன்னிப்பு கோரியுள்ளார்.
'எனது கடமையிலிருந்து நடுவழியில் விட்டுச் சென்றுவிட்டதாக மக்கள் உணர்கிறார்கள். நாம் ஆட்சியிலிருந்து விலகியது மக்களை அதிருப்திக்கு உள்ளாக்கியுள்ளது. டெல்லி லோக்சபா தேர்தல் முடிவுகளிலிருந்து ஒன்று தெளிவாகியுள்ளது. 'நாங்கள் நேர்மையானவர்கள், எப்போதும் மற்றவர்களை சோதனைப்படுத்துவோம்' என மக்கள் சொல்கிறார்கள்.
இப்போது நாம் மீண்டும் டெல்லியில் புதிதாக தேர்தலை நடத்த உரிமை கோரவுள்ளோம். மீண்டும் மக்களிடம் சென்று நான் ஏன் பதவி விலகினேன் என விளக்கப் போகிறேன். மக்கள் ஏன் இப்போது கோபத்தில் இருக்கிறார்கள் என எனக்கு தெரிகிறது. நாங்கள் ஆட்சியிலிருந்த போது மின்சாரக் கட்டணத்தை குறைத்திருந்தோம். காங்கிரஸ் தற்போது மீண்டும் அதிகரித்துவிட்டது. காவல்துறை மக்களை மீண்டும் சீண்டத் தொடங்கியுள்ளது. விற்பனை வரிகள் உயரத்தொடங்கிவிட்டன' எனவே மீண்டும் நாம் தேர்தலில் நிற்கப் போகிறோம் என அவர் கூறியுள்ளார். இதேவேளை மீண்டும் தேர்தலை சந்திக்குமாறு ஆம் ஆத்மியின் சில எம்.எல்.ஏக்களும் அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு ஆலோசனை கூறியுள்ளனர்.
எனினும் பெரும்பாலான எம்.எல்.ஏக்கள் உடனடியாக தேர்தலை நடத்தக்கோர வேண்டாம். மோடி அலை அடிப்பதால் டெல்லியில் ஆட்சி மாற வாய்ப்பிருப்பதாக அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு எச்சரித்துள்ளனர்.

0 Responses to டெல்லி மக்களிடம் மன்னிப்புக் கோரினார் அர்விந்த் கெஜ்ரிவால்