Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அச்சுவேலி கதிரிப்பாய் பகுதியில் ஒரே குடும்பத்தினைச்சேர்ந்தவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் படுகாயமடைந்த நாலாவது பெண்மணியினது நிலை தொடர்ந்தும் பரிதாபகரமாகவே உள்ளதாக வைத்திய சாலை வட்டாரங்கள் அறிவித்துள்ளன. இக்கொலை தாக்குதலில் தாய், மகன் மற்றும் மகள் மூவரும் வாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளனர். மேலும் இருவர் படுகாயமடைந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டள்ளனர்.அவர்களுள் ஒருவரது நிலையே மோசமடைந்துள்ளது.

இன்று (04) அதிகாலை 1 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் நிக்கோநாதன் அருள்நாயகி(50), யசோதரன் மதுசா(27), நிக்கோநாதன் சுபாங்கன்(19) ஆகிய மூவரும் உயிரிழந்துள்ளதுடன், நிக்கோநாதன் தர்மிகா (25), க. யசோதரன் (30) ஆகிய இருவரும் படுகாயமடைந்தனர்.இச்சம்பவத்தில் வீட்டிலிருந்த 3 வயதுக் குழந்தை எவ்விதமான உயிராபத்துகளும் இன்றி தப்பித்துள்ளது.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் இன்று (04) காலை கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். அத்துடன் இந்த முக்கொலைக்கு பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும்  முச்சக்கரவண்டியொன்றினை மீட்டுள்ளதாக அச்சுவேலிப் பொலிஸார் தெரிவித்தனர்.நவக்கிரி என்னும் இடத்தில் இருந்து மீட்கப்பட்ட இந்த முச்சக்கரவண்டியினுள் பெருமளவு இரத்தக்கறைகள் இருந்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள தர்மிகாவின் கணவரான தனஞ்செயன் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். இந்தக் கொலைகள் தொடர்பில் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் குறித்த நபரே கொலைகளுக்கு காரணம் என தெரியவந்ததினையடுத்து, ஊரெழுப் பகுதியில் குறித்த நபர் மறைந்திருந்த போது கைது செய்யப்பட்டார்.

தனது மனைவியினை கைவிட்டு அவரது தங்கையினை திருமணம் செய்து தருமாறு இந்நபர் குறித்த தாக்குதலை நடத்தியுள்ளார்.கொலையுடன்  தொடர்புடைய அவரது நண்பரும் கைதாகியுள்ளார்.





0 Responses to மூவர் படுகொலை! தனிப்பட்ட கோபதாபங்கள் கொலையில்!! (படங்கள் இணைப்பு)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com