தமிழ்க்கடவுளாம் முருகனின் பக்தி, பெருமையை அனைத்துலகுக்கும் எடுத்துக்கூறும் முருகபக்தி மாநாடு இன்று 2ம் திகதி முதல் மூன்று தினங்களுக்கு சுவிற்சர்லாந்து சென்மார்க்கிறேத்தன் செங்காளன் மாநிலத்தில் நடைபெறுகின்றது.
மலேசியா திருமுருக திருவாக்கு திருபீடத்தின் ஏற்பாட்டில் செங்காளன், சென்.மார்க்கிறேத்தன் கதிர்வேலாயுத சுவாமி தேவஸ்தானத்தினால் இந்த மாநாடு நடத்தப்படுகின்றது. சுவிஸில் உள்ள 23 இந்து ஆலயங்ககளின் பரிபாலன சபைகளும் இந்த மாநாட்டுக்கு அனுசரணை வழங்கவுள்ளார்கள். சுவிஸ் நாட்டில் வாழும் 45 ஆயிரம் புலம் பெயர்ந்த தமிழர்கள் இந்த மாநாட்டின்வெற்றிக்கும், எழுச்சிக்கும் பங்களிப்பை வழங்கவுள்ளனர்.
சைவ சமயத்தின் தொன்மையை வெளிப்படுத்தல், முருக பக்தியை மேம்படுத்தி வளர்த்தல், மதமாற்றத்தைத தடுத்தல் போன்ற மூன்று இலக்குகளுடன் இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சிறப்பு வெளியீடு, கண்காட்சி, சிறுவர்களுக்கான சமய அறிவுப் போட்டி, ஆய்வுக் கட்டுரை சமர்பித்தல், சிறப்பு உரை, கலை நிகழ்வு என பல்வேறுபட்ட பரிமாணங்களுடன் இந்த மாநாட்டை நடத்துவதற்கு ஏற்பாட்டுக் குழு நடவடிக்கை எடுத்துள்ளது.
சுவிஸ் சென்மார்க்கிறேத்தன் செங்காலன் மாநில அரசு இந்த மாநாட்டை நடத்துவதற்கான அனுமதியை வழங்கியுள்ளது. மாநாட்டை சிறப்பாக நடத்த பல்வேறுவகையான உதவிகளையும் வழங்க மாநில அரசு முன்வந்துள்ளது.சைவ சமய அறிவைப் பெறுவதற்காக விருப்பம் கொண்டுள்ள சுவிஸ் நாட்டைச்சேர்ந்த புத்தி ஜீவிகள், பிரமுகர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்க ஆர்வம் கொண்டிருப்பதாக மாநாட்டு ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.
முருகனின் பெருமையை வெளிப்படுத்தும் வகையில் ஆய்வுக் கட்டுரைகள் இந்த மாநாட்டில் வாசிக்கப்படவுள்ளன. இலங்கை, இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், ஐரோப்பா , கனடா , அமெரிக்கா , தென்னாப்பிரிக்கா அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளைச்சேர்ந்த அறிஞர்கள் ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பிக்கவுள்ளனர்.
Industrie Str. 27, 9430 St. Margrethen, Switzerland” என்ற விலாசத்தில் அமைந்துள்ள ஶ்ரீ கதிர்வேலாயுத சுவாமி கோவிலில், மே 2 ஆம் திகதி (இன்று) ஆரம்ப நிகழ்வும், நாளை 03ம் திகதி, மறுதினம் 04ம் திகதி, Mehrzweck & Sportanlagen, Amtacker Strasse, 9437 Marbach .SG எனும் முகவரியில் அமைந்துள்ள மண்டபத்தில் மாநாடு இடம்பெறும்.
அருட் பெரியார்களின் அருள் உரைகள், சிறப்புப் பேச்சாளர்களின் பேருரைகள், பேராளர்ர்களின் கருத்துரைகள்,பக்தி இசையால் நாத ஆராதனைகள், ஆடும்பிரானுக்கு நடன அஞ்சலிகள், அருட்புகழைப் போற்றும் மாநாட்டு மலர் வெளியீடு, நல்லாசிகள் வழங்கும் திருப்பீடத்திலிருந்து அருட் பிரசாதங்களும்,அருட் சின்னங்களும் வழங்தல் ஆகிய சிறப்பு அம்சங்களோடு மேலும் பல அருட் கூறுகளுடன் இம் மாநாடு நடைபெறவுள்ளது.
திருமுருக திருவாக்கு திருபீடத்தின் முருகபக்தி மாநாடு கடந்தவருடம் 2012 இல் மலேசியாவில் நடைபெற்றது. 2014 இல் இரண்டாவது மாநாடு சுவிற்சர்லாந்திலும், மூன்றாவது மாநாடு தென்னாப்பிரிக்காவிலும் நடைபெறும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

0 Responses to இன்று சுவிற்சர்லாந்தில் ஆரம்பமாகிறது அனைத்துலக முருக பக்தி மாநாடு 2014