Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்தில் இன்று காலை சக்திவாய்ந்த இரட்டைக் குண்டுகள் வெடித்துள்ளன. இதில் ஆந்திராவைச் சேர்ந்த 22 வயது இளம்பெண் ஒருவர் பலியாகியுள்ளார்.

14பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.

கவுஹாத்தியிலிருந்து சென்னை வழியாக  பெங்களூருக்கு செல்லவிருந்த கவுஹாத்தி எக்ஸ்பிரஸ் ரயிலின் S-4, S-5 பெட்டிகளில் அடுத்தடுத்து இரண்டு குண்டுகள் வெடித்துள்ளன. இதில் 22 வயதுள்ள ஆந்திராவைச் சேர்ந்த பெண் ஒருவர் பலியாகியுள்ளார். 14 பேர் படுகாயமடைந்து சென்னை ராஜீவ்  காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். பலியான பெண்ணுக்கு 1 லட்சம் ரூபாய் நிதியுதவியும், படுகாயமடைந்தவர்களுக்கு 25 ஆயிரம்  ரூபாயும்,லேசான காயமடைந்தவர்களுக்கு 5 ஆயிரம் ரூபாயும் என்று தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

நேற்று ஐஎஸ்ஐ உளவாளி ஜாகீர் உசேன் கைது செய்யப்பட்டபோது, சென்னையில் நாசவேலைகளில் ஈடுப்படத் திட்டமிட்டு இருந்ததாக ஜாகீர் உசேன் தெரிவித்திருந்தது இவ்வேளையில் குறிப்பிடத் தக்கது.

சென்னை சென்ட்ரல் ரயில்நிலைய குண்டுவெடிப்புக் குறித்துத் தகவல் அறிந்துக் கொள்ள 044-25357398 என்கிறத் தொலைப்பேசி எந்நிலத் தொடர்புக் கொள்ளலாம்.

குண்டு வெடிப்பு நிகழ்ந்த கவுஹாத்தி ரயிலில் பதுங்கியிருந்த ஒருவர் கைது செய்யப்பட்டு, அவரிடம் விசாரணைத் தொடர்ந்து வருகிறது. சேதமடைந்த 3 பெட்டிகளைத் தவிர எஞ்சிய பயணிகள் அடங்கிய கவுஹாத்தி ரயில் காலை 10.30 மணிக்குப்  புறப்பட்டு சென்றது.

0 Responses to சென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்தில் இரட்டை குண்டுவெடிப்பு!: இளம்பெண் பலி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com