சென்னை சென்ட்ரல் ரயில் நிலையக் குண்டு வெடிப்புச் சம்பவத்தால் தமிழக மக்கள் யாரும் பீதியடைய வேண்டாம் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இன்று காலை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இரட்டை குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்து ஒரு இளம்பெண் பலியாகியுள்ளார். இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள ஜெயலலிதா, சென்ட்ரல் ரயில் நிலைய குண்டு வெடிப்புச் சம்பவம் கண்டனத்துக்குரியது.
இது குறித்த விசாரணையை மேற்கொள்ள குற்றப் புலனாய்வு பிரிவுக்கு உத்தரவிட்டுள்ளேன் என்று கூறியுள்ளார். மேலும் இந்தக் கொடூர சம்பவத்தில் காயம் அடைந்தவர்களுக்கு உயர்தர சிகிச்சை அளிக்கத் தேவையான உதவிகளைச் செய்து தருமாறு அதிகாரிகளுக்கும் மருத்துவமனை நிர்வாகிகளுக்கும் உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். குண்டு வெடிப்பு சம்பவத்தில் பலியான பெண்ணின் குடும்பத்துக்கு ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவியும், பலத்த காயம் அடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு தலா 25 ஆயிரம் ரூபாயும் நிதியுதவி வழங்க முதலமைச்சர் காப்பீட்டு நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளதாகவும் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
இந்தக் குண்டு வெடிப்புச் சம்பவத்தால் தமிழக மக்கள் யாரும் பீதியடைய வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ள ஜெயலலிதா, அனைத்துப் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் தமிழக காவற் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர் என்றும் கூறியுள்ளார்.

0 Responses to குண்டு வெடிப்பு சம்பவத்தால் தமிழக மக்கள் பீதியடைய வேண்டாம்!:ஜெயலலிதா