Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழக-இலங்கை மீனவர் பிரதிநிதிகளிடையே நடைப்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழக-இலங்கை மீனவர் பிரதிநதிகளின் 2ம் கட்டப் பேச்சுவார்த்தை இலங்கையின் கொழும்பு நகரில் நேற்று நடைப்பெற்றது. இந்த பேச்சுவார்த்தை இன்றும் நடைப்பெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று தமிழக மீனவர்கள் பேச்சுவார்த்தைக்கு செல்லவில்லை. காரணம் நேற்றையப் பேச்சுவார்த்தையில் தமிழக மீனவர்கள் கோரிக்கை ஏற்கப்படாததால் இன்று அவர்கள் பேச்சுவார்த்தைக்கு செல்லவில்லை என்று தெரிய வருகிறது.

இரட்டை மடி வலை போன்ற தடை செய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்த இலங்கை மீனவர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர் என்றும், இதனால் இலங்கை கடல் வளம் வெகுவாக  பாதிக்கப்படும் என்று அவர்கள் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் கடல் இரு நாட்டு கடல் எல்லைகளை வகுக்கவும் இலங்கை மீனவர்கள் எதிர்ப்புத் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து தமிழக மீனவர்கள் இன்றைய 2ம் நாள் பேச்சுவார்த்தைக்கு செல்லவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

0 Responses to தமிழக - இலங்கை மீனவர்களின் பேச்சுவார்த்தைத் தோல்வி?

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com