பிரதமர் மன்மோகன் சிங் மிகச்சிறந்த புலமை வாய்ந்தவர் என பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான அருண் ஜெட்லி புகழாரம் சூட்டியுள்ளார்.
இன்றுடன் பிரதமர் மன்மோகன் சிங் தனது இறுதி அமைச்சரவைக் கூட்டத்திலிருந்து பிரியாவிடை பெறுகிறார். இந்நிலையில் பிரதமர் மன்மோகன் சிங்கின் கடந்த பத்தாண்டு ஆட்சிக் காலத்தில் அவருடைய சேவைகளை பாராட்டி பல மூத்த அமைச்சர்கள் அவருக்கு வாழ்த்துரைகளையும், பரிசுப் பொருட்களையும் வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில் பாஜக மூத்த தலைவர் அருண் ஜெட்லி பிரதமர் மன்மோகன் சிங் குறித்து தனது வலைப்பதிவில் தெரிவிக்கையில், பிரதமர் மன்மோகன் சிங் மிகச்சிறந்த புலமை வாய்ந்தவர். அவர் எந்தவொரு கருத்தையும் யோசிக்காமல் சொல்லமாட்டார். அவர் மிகச்சிறந்த நிதி அமைச்சர் என்பதிலும் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை. அகரணம் அப்போது பிரதமராக இருந்த பிவி நரசிம்மா ராவ், மன்மோகன் சிங்கிற்கு வழிகாட்டியாக இருந்தார். 1991ம் ஆண்டு இந்திய பொருளாதாரம் மாற்றம் பெறத் தொடங்கியதற்கு இதுவும் ஒரு காரணம்.
ஆனால் சோனியா காந்தியின் கண்காணிப்பின் கீழ் மன்மோகன் சிங்கால் ஒன்றுமே தான் நினைத்தது போன்று செய்ய முடியவில்லை. தனது அதிகாரத்தின் கீழ் செயற்பட அவருக்கு எப்போதுமே கட்டுப்பாடுகள் இருந்தன. அவரால் எப்போதுமே சிறந்த தலைவராக தன்னை நிறுத்திக் கொள்ள முடியவில்லை. மன்மோகன் சிங் தனக்குத் தேவையான தனிப்பட்ட ஆளுமைகளை விட எப்போதும் அதிக புலைமையை கொண்டிருந்தார். ஆனால் அவரால் செயற்படமுடியவில்லை என அருண் ஜெட்லி கூறியுள்ளார்.

0 Responses to மன்மோகன் சிங் மிகச்சிறந்த புலமை கொண்டவர், ஆனால் சிறந்த தலைவர் இல்லை : அருண் ஜெட்லி