Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நான் தாழ்ந்த சமூகத்தை சேர்ந்தவன் என்பதனால் குறிவைக்கப்படுவதாக நரேந்திர மோடி தனது தேர்தல் பிரச்சாரத்தில் தெரிவித்துள்ளார்.

பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கும், காங்கிரஸ் கட்சிக்காக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் பிரியங்கா காந்திக்கும் இடையில் கடும் சொல் யுத்தம் மூண்டுள்ளது. மோடி, தனது தந்தை ராஜீவ் காந்தியை அவமானப்படுத்துவதாக அமேதியில் வைத்து பிரச்சாரக் கூட்டத்தில் பிரியங்கா தெரிவித்தார். அதற்கு பதில் அளித்துள்ள மோடி, நான் தாழ்த்தப்பட்ட சமூகத்திலிருந்து வந்தவன். இதனால் தான் எதிர்க்கட்சிகள் என்னிடம் கீழ்த்தரமான அரசியல் கொண்டு பழிவாங்குகின்றன.

சிலர் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். ஆனால் தாழ்த்தப்பட்ட சமூகத்திலிருந்து வந்தவர்களால் தான் இந்நாடு மிகவும் உயர்ந்த மட்டத்தை அடைந்திருக்கிறது என்றார்.

அதற்கு மீண்டும் பதில் அளித்துள்ள காங்கிரஸ், 'மோடி தற்போது தாழ்த்தப்பட்ட சமூகம்' எனும் கவர்ச்சி வாக்கியத்தை கையில் ஆயுதமாக எடுத்துள்ளார். இதன் மூலம் பெருமளவிலான வாக்காளர்களை கவரலாம் என்பது அவரது எண்ணம் என்றார்.

0 Responses to நான் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவன் என்பதனால் குறிவைக்கப்படுகிறேன்! - மோடி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com