Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சென்டரல் ரயில் நிலைய இரட்டைக் குண்டு வெடிப்பை அடுத்து தமிழகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப் படுத்தப் பட்டுள்ளது.

இன்று காலை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சக்திவாய்ந்த இரட்டை குண்டு வெடிப்பு நிகழ்ந்து ஒரு இளம்பெண் பலியாகியுள்ளார். 14 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இச்சம்பவத்தை அடுத்து தமிழகத்தில் உள்ள முக்கிய நகரங்களின் முக்கிய இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

சென்னையில் கோயம்பேடு பேருந்து நிலையம், மீனம்பாக்கம் விமான நிலையம், எழும்பூர் ரயில் நிலையம் உட்பட முக்கிய இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாகியுள்ளன. சென்னையை அடுத்து கோவை, மதுரை ஆகிய ஊர்களின் முக்கிய இடங்கள், கோயிகள முதலியவற்றில் பாதுகாப்பு தீவிரமாகியுள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே மாநில அரசுக்கு தேவையான உதவிகளை செய்ய அதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளார்.

0 Responses to சென்டரல் ரயில் நிலைய இரட்டைக் குண்டு வெடிப்பை அடுத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com