Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பிரித்தானியா – கிலாஸ்கோவில் எதிர்வரும் ஜுலை மாதம் நடைபெறவுள்ள பொதுநலவாய விளையாட்டு போட்டிகளில் மகிந்தராஜபக்ஷ பங்குபற்றுவது சிக்கலை ஏற்படுத்தும் என்று, பிரித்தானியாவின் தொழிற்கட்சி சுட்டிக்காட்டியுள்ளது. பிரித்தானிய தொழிற்கட்சியின் வெளிவிவகாரங்களுக்கு பொறுப்பான நாடாளுமன்ற உறுப்பினர் (நிழல் அமைச்சர்) டக்ளஸ் அலக்சாண்டர் (Douglas Alexander) இதனைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சுக்கு கடிதம் ஒன்றையும் அனுப்பி வைத்துள்ளார்.  மகிந்த ராஜபக்ஷ, பிரித்தானிய முன்வைத்த நிபந்தனைகள் எதனையும் இதுவரையில் நிறைவேற்றவில்லை. அத்துடன் இலங்கைக்கு எதிராக தற்போது பிரித்தானியா யுத்த குற்ற விசாரணைக்கான ஆயத்தங்களையும் செய்திருக்கிறது.

மேலும் இலங்கைக்கு எதிராக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் மகிந்த ராஜபக்ஷ எதிர்வரும் ஜுலை மாதம் 23ம் திகதி முதல் ஒகஸ்ட் 3ம் திகதி வரையில் நடைபெறவுள்ள பொதுநலவாய போட்டிகளுக்கு தலைமை தாங்க மகிந்தராஜபக்ஷ கிலாஸ்கோ வரவுள்ளார்.

இது பிரித்தானியாவில் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தும் என்றும், புலம்பெயர்ந்த நிலையில் பிரித்தானியாவில் உள்ள தமிழ் மக்கள் அவருக்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டங்களை நடத்துவார்கள் என்றும் அவர் எச்சரித்துள்ளார். இந்த சூழ்நிலையை பிரித்தானிய அரசாங்கம் எவ்வாறு சமாளிக்கும் என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்?

0 Responses to பொதுநலவாய விளையாட்டு போட்டிகளில் மகிந்தராஜபக்ஷ பங்குபற்றுவது சிக்கலை ஏற்படுத்தும்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com