Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இன்று திங்கட்கிழமை லிபியாவுக்கும் தென் இத்தாலிக்கும் இடையே லம்பெடுசா தீவின் தெற்கே மத்தியதரைக் கடலில் 400 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த படகு கவிழ்ந்தில் குறைந்தது 14 பொது மக்கள் பலியாகினர்.

மேலும் இன்று திங்கட்கிழமைக்குள் 200 பேர் வரை மீட்புப் பணியாளர்களால் காப்பாற்றப் பட்டிருப்பதாகவும் உத்தியோகபூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த வார இறுதியில் லிபியக் கடலோரமாக ஒர் படகு கவிழ்ந்து 36 பேர் கொல்லப் பட்ட சம்பவம் அறிவிக்கப் பட்டு ஒரு நாளைக்குள் பரபரப்பு அடங்கும் முன்னரே இவ்விபத்து ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது மீட்புப் பணியில் இரு யுத்தக் கப்பல்களும் ஒரு ஹெலிகாப்டரும் லிபியக் கப்பற் படையால் ஈடுபடுத்தப் பட்டுள்ளன.

ஐரோப்பிய யூனியனுக்கு ஆப்பிரிக்கவில் இருந்து புலம் பெயர்பவர்கள் உள்நுழையும் முக்கிய கேந்திரமாக லிபியா விளங்கி வருவது குறிப்பிடத்தக்கது. கடந்த வருடம் லம்பெடுசாவுக்கு அருகே இரு படகு விபத்துக்களில் 400 இற்கும் அதிகமான புலம்பெயர்வோர் கொல்லப் பட்டுள்ளனர். மேலும் கடந்த 20 வருடங்களில் ஐரோப்பாவுக்கு வர முனைந்த 20 000 மக்கள் கடலில் பலியானதாக புள்ளி விபரம் கூறுகின்றது. இதேவேளை கடந்த 5 நாட்களுக்குள் தாம் 2000 அகதிகளை மீட்டிருப்பதாக இத்தாலி இராணுவம் அறிவித்துள்ளது. லிபியாவில் இருந்து மத்திய தரைக் கடலின் ஊடாக ஐரோப்பாவுக்குள் நுழையும் தஞ்சம் தேடுபவர்கள் பெரும்பாலும் எரிட்ரியா, சோமாலியா, சிரியா மற்றும் லிபியா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

0 Responses to லிபியாவில் அடுத்த படகு விபத்து:14 பேர் பலி:200 பேர் மீட்கப் பட்டனர்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com