இலங்கை இறுதி மோதல் களமான முள்ளிவாய்க்கால் பகுதியில் உயிரிழந்த பெரும் எண்ணிக்கையான பொதுமக்களை நினைகூர்ந்து, தீபமேற்றி அஞ்சலி செலுத்திய நிகழ்வை பொலிசார் தடுத்து குழப்பியுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் குற்றஞ்சாட்டியுள்ளார்.
யாழ்ப்பாணம் கைதடியில் உள்ள வடக்கு மாகாண சபையின் சபா மண்டபத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இந்த நிகழ்வு இடம்பெறுவதற்கான ஏற்பாடுகளைச் செய்து அதற்கான அழைப்பை ஏற்பாட்டுக் குழுவின் சார்பில் சிவாஜிலிங்கம் விடுத்திருந்தார். நிகழ்வில் கலந்து கொள்வதற்காகச் சென்றபோது மாகாண சபையின் நுழைவாயில்கள் பூட்டுகள் போட்டு இழுத்து மூடப்பட்டிருந்ததாகவும், மாகாண சபை வளாகத்திற்குள்ளேயும், வெளியிலும் கலகமடக்கும் பொலிஸார் குவிக்கப்பட்டிருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மாகாணசபை வளாகத்திற்குள் எவரும் செல்ல முடியாது என்று கூறிய பொலிஸார், தம்மையும் மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரனையும் தடுத்து நிறுத்தி, அங்கு நிற்கவிடாமல் அனுப்பி வைக்க முயன்றதாக எம்.கே.சிவாஜிலிங்கம் குறிப்பிட்டுள்ளார்.
தாங்கள் மாகாண சபை வளாகத்தின் நுழைவாயிலுக்கு அருகில் வாழைமரத் தண்டு ஒன்றின் மீது ஏற்றிய தீபத்தை பொலிஸ் அதிகாரி ஒருவர் பாய்ந்துவந்து காலால் உதைத்து வீழ்த்தியதாகவும், அந்த நிலையிலும் தாங்கள் முள்ளிவாய்க்காலில் இறந்தவர்களை நினைவுகூர்ந்து உரையாற்றி அஞ்சலி செலுத்தியாகவும் அவர் பி.பி.சி.யிடம் தெரிவித்துள்ளார்.
முள்ளிவாய்க்காலில் இறந்தவர்களை அவர்களது உறவினர்கள் தமது வீடுகளில் நினைகூரலாம், விளக்கேற்றலாம். ஆனால், பொது இடங்களில் கூட்டம் கூடி அஞ்சலி செலுத்தவோ, தீபம் ஏற்றி நினைவுகூரவோ முடியாது என்று இராணுவமும், காவல்துறையினரும் அறிவித்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

0 Responses to முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களுக்கான அஞ்சலி நிகழ்வில் பொலிஸார் குழப்பம்: சிவாஜிலிங்கம் குற்றச்சாட்டு!