Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில், சுதாகரன் திருமணத்திற்கு பணம் வாங்காமல் இசை நிகழ்ச்சி நடத்திக் கொடுத்ததாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் வாக்குமூலம் அளித்துள்ளார்.

ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, வளர்ப்பு மகன் சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் விசாரணை பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் புதன்கிழமை விசாரணைக்கு வந்துள்ளது.

அப்போது வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள நால்வரும் ஆஜராகவில்லை.

இந்நிலையில், தனது இறுதிவாதத்தை தொடர்ந்த அரசு வழக்கறிஞர் பவானி சிங், சென்னையைச் சேர்ந்த வருமான வரி இணை ஆணையர்கள் சீனிவாசன், சுப்பாராவ், சீத்தாராமன் ஆகியோர் அளித்த 76 பக்க வாக்குமூலத்தை வாசித்துள்ளார்.

அந்த வாக்குமூலத்தில் 1995ம் ஆண்டு நடைபெற்ற ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுதாகரனின் திருமணத்தில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சி நடத்தியதை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக ஏ.ஆர்.ரகுமான் அளித்த வாக்குமூலத்தை அவர் வாசித்தார். அதில், சுதாகரனின் மனைவி நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் குடும்பத்தைச் சேர்ந்தவர்.

மேலும்,தமிழ் திரையுலகில் மிக மூத்த கலைஞரின் குடும்பவிழா என்பதால், பணம் வாங்காமல் இசை நிகழ்ச்சி நடத்திக் கொடுத்தேன்.

இதற்காக ஜெயலலிதாவின் வீட்டிலிருந்து வெள்ளி தாம்பூலம், வெள்ளிக் கிண்ணம், குங்குமச் சிமிழ் உள்ளிட்ட சில வெள்ளிப் பொருட்களை எனக்கு பரிசாக வழங்கினர் என கூறியுள்ளார்.

0 Responses to ஜெயலலிதா வழக்கில் ஏ.ஆர்.ரகுமானின் அதிரடி வாக்குமூலம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com