சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குண்டு வெடிப்பு சம்பவம் எப்படி நிகழ்ந்தது என்று ரயில்வே அதிகாரி ஒருவர் பரபரப்பு தகவல்களை வெளியிட்டுள்ளார்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய மேலாளர் கோவிந்தசாமி இதுபற்றி கூறியதாவது, சென்டிரல் ரயில் நிலையம் முதல்முறையாக இந்த மோசமான குண்டு வெடிப்பு சம்பவத்தை சந்தித்துள்ளது. இது முற்றிலும் எதிர்பாராமல் நிகழ்ந்த சம்பவம்.
பல மாநிலங்களை கடக்கும் கவுகாத்தி எக்ஸ்பிரஸ்
குண்டு வெடித்த கவுகாத்தி எக்ஸ்பிரஸ் கர்நாடக மாநிலத்தில் புறப்பட்டு ஆந்திராவில் நுழைந்து, சென்னை நகருக்குள் சங்கமிக்கிறது.
மீண்டும், சென்னையில் இருந்து புறப்பட்டு ஆந்திரா, ஒடிசா, மேற்கு வங்காள மாநிலங்கள் வழியாக அசாம் மாநிலம் சென்றடைகிறது.
பெங்களூரில் தாமதம் ஏன்?
பெங்களூரில் இருந்து வழக்கமான நேரத்தை விட ஒன்றரை மணி நேரம் காலதாமதமாக புறப்பட்டுள்ளது.
இந்த காலதாமதம் ஏன் என்பது பற்றி பெங்களூர் ரயில் நிலைய அதிகாரிகளிடம் விசாரணை நடந்து வருகிறது.
பெங்களூரில் புறப்பட்ட ரயில் சென்னை சென்ட்ரலை காலை 7.05 மணிக்கு வந்து அடைந்துள்ளது.
குண்டுவெடிப்பு விவரம்
இந்நிலையில், காலை 7.20 மணிக்கு எஸ்.4 பெட்டியில் முதல் குண்டு வெடித்துள்ளது.
அடுத்த சில வினாடிகளில் எஸ்.5 பெட்டியில் பயங்கர சத்தத்துடன் மற்றொரு குண்டு வெடித்துள்ளது.
அப்போது ரயில்வே பிளாட்பார கண்காணிப்பு பணியில் சென்ட்ரல் ரயில் நிலைய அதிகாரிகள், குண்டுவெடிப்பு சம்பவம் பற்றி ரயில் நிலைய துணை மேலாளருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
அவர் காலை 7.30 மணிக்கு மருத்துவ குழுவினருடன் குண்டு வெடிப்பு நடந்த 9வது பிளாட்பாரத்துக்கு சென்றுவிட்டார். காயமடைந்த பயணிகளுக்கு மருத்துவ குழுவினர் முதலுதவி சிகிச்சை அளித்தனர்.
அதன்பிறகு காயமடைந்தவர்களை ஆம்புலன்சில் ஏற்றி சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தோம்.
அதிக சேதமடைந்த பெட்டிகள்
குண்டு வெடிப்பில் எஸ்.5 பெட்டியில் தான் அதிக சேதம் ஏற்பட்டுள்ளது. அந்த பெட்டியில் 25 முதல் 32 வரையிலான இருக்கைகள் சேதமடைந்துள்ளன.
இறந்துபோன இளம்பெண் சுவாதி, இந்த பெட்டியில் 28வது இருக்கையில் பயணித்துள்ளார்.
அந்த இருக்கைக்கு கீழே தான் குண்டு வெடித்துள்ளது. குண்டு வெடித்ததில் அந்த பெட்டியில் 1 மீட்டர் அளவுக்கு வட்டமாக பெரிய துவாரம் விழுந்து விட்டது.
எஸ்.4 பெட்டியில் 65 முதல் 72 வரையிலான இருக்கைகள் சேதமடைந்தன.
70–வது இருக்கைக்கு கீழே, கழிவறைக்கு அருகில் குண்டு வெடித்துள்ளது.
புதிதாக 3 பெட்டிகளுடன் கவுகாத்தி எக்ஸ்பிரஸ்
இதனை அடுத்து, சம்பவம் நடந்த கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் புதிதாக 3 பெட்டிகள் இணைக்கப்பட்டு பிற்பகல் 12.15 மணியளவில் பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட்டது என்று தெரிவித்துள்ளார்.

0 Responses to ரயிலில் குண்டு வெடித்தது எப்படி? பரபரப்பு தகவல்