3 மாதங்களுக்கு முன்பு காணாமல் போன மலேசிய விமானத்தில் பயணித்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 30 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கும் பணிகளை காப்பீட்டு நிறுவனம் தொடங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
காணாமல் போன மலேசிய விமானத்தின் முழுமையானத் தகவலையும் மலேசிய அரசு இன்னமும் வெளியிடாத நிலையில், இழப்பீட்டுத் தொகை முழுமையையும் அளிக்க முடியாத நிலையில் காப்பீட்டு நிறுவனங்கள் உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. எனவே முதற்கட்ட நடவடிக்கையாக காணமல் போன மலேசிய விமானத்தில் பயணித்தவர்களின் குடும்பங்களுக்கு 30 லட்சம் ரூபாய் இழப்பீட்டுத் தொகை வழங்கும் பணியை காப்பீட்டு நிறுவனங்கள் துவக்கியுள்ளன.
கடந்த மார்ச் மாதம் 8ம் திகதி மலேசியாவிலிருந்து சீனாவுக்கு புறப்பட்ட விமானத்தில் 239 பயணிகள் இருந்தனர் என்பதும், விமானம் புறப்பட்ட ஒன்றரை மணி நேரத்தில் மாயமாகிப் போனது என்பதும் குறிப்பிடத்தக்கது. விமானத்தில் சென்னையை சேர்ந்த ஒரு பெண்ணும் பயணித்தார்.

0 Responses to காணாமல் போன மலேசிய விமானத்தில் பயணித்தவர்களின் குடும்பங்களுக்கு 30 லட்சம் ரூபாய் இழப்பீடு!