இன்று சனிக்கிழமை காலை உக்ரைன் இராணுவத்துக்குச் சொந்தமான விமானம் ஒன்று ரஷ்ய ஆதரவுப் போராளிகளால் சுட்டு வீழ்த்தப் பட்டதில் 49 பேர் பலியாகியிருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
போராளிகள் கட்டுப்பாட்டில் இருக்கும் உக்ரைன் நகரமான லுகான்ஸில் உக்ரைன் அரசின் பிடியில் இருக்கும் விமான நிலையத்தை நோக்கி சென்று கொண்டிருந்த Ilyushin-76 என்ற விமானமே போராளிகளால் சுட்டு வீழ்த்தப் பட்டுள்ளது.
இவ்விமானத்தில் 40 படை வீரர்களும் 9 ஊழியர்களும் பயணம் செய்து கொண்டிருந்ததாகவும் மேலும் இராணுவத்துக்குத் தேவையான ஆயுதங்களும், பொருட்களும் கூட ஏற்றிச் செல்லப் பட்டிருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக உக்ரைன் அதிபர் பெட்ரோ பொரொஷெங்கோ கருத்துத் தெரிவிக்கையில் ஞாயிற்றுக்கிழமை கொல்லப் பட்டவர்களுக்காக துக்க தினம் அனுட்டிக்கப் படும் என்றும் இத்தாக்குதலை நிகழ்த்தியவர்களுக்கு நிச்சயம் தண்டனை அளிக்கப் படும் என்றும் கூறியுள்ளார்.
தற்போது லுகான்ஸ் நகரில் வசித்து வரும் ரஷ்ய ஆதரவு குடிமக்கள் அந்நகரைக் கைப்பற்ற முன்னேறி வரும் உக்ரைன் பாதுகாப்புப் படையினரைத் தடுக்கும் முயற்சியைக் கைவிட்டு விட்டதாகக் கூறப்படுகின்றது. எனினும் ரஷ்ய நாட்டின் 3 யுத்த டேங்கிகள் எல்லையைக் கடந்து டொனெட்ஸ்க் நகரை நோக்கிச் சென்றதாகத் தகவல் வெளியான போதும் ரஷ்யா இதனை மறுத்து விட்டது. இன்று காலை சுட்டு வீழ்த்தப் பட்ட உக்ரைனின் இராணுவ விமானத்தின் இழப்பே ரஷ்ய ஆதரவுப் போராளிகளுடன் உக்ரைன் போராடத் தொடங்கியதில் இருந்து ஏற்பட்ட மிகப் பெரிய இழப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

0 Responses to ரஷ்ய ஆதரவுப் போராளிகளால் உக்ரைன் இராணுவ விமானம் சுட்டு வீழ்த்தப் பட்டது!: 49 பேர் பலி