காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதுத் தொடர்பாக பிரதமருக்கு ஜெயலலிதா எழுதிய கடிதம் அரசியல் நோக்கம் கொண்டது என்று, கர்நாடக முதல்வர் சித்தாராமையா கூறியுள்ளார்.
இதுத் தொடர்பாக பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய சித்தாராமையா, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது என்பது சட்டப்படி மத்திய அரசால் சாத்தியமில்லாதது என்று கூறியதாகத் தெரிய வருகிறது. மேலும், கர்நாடகமும், தமிழகமும் காவிரி நதிநீர்த் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்து, அவ்வழக்குகள் நிலுவையில் இருக்கிறது என்றும், அப்படி வழக்குகள் நிலுவையில் இருக்கும்போது, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது என்பது சரியான முடிவல்ல என்றும் கூறியுள்ளார்.
சித்தாராமையா சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து, மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முற்பட்டால் அதை சட்டப்படி எப்படித் தடுப்பது என்று முடிவெடுத்துள்ளார் என்பது இவ்வேளையில் குறிப்பிடத் தக்கது.

0 Responses to ஜெயலலிதாவின் கடிதம் அரசியல் நோக்கம் கொண்டது!: சித்தாராமையா