Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் மேற்கு வங்கத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் புகார்கள் குறைவு என்று, அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

மேற்கு வங்க சட்டபேரவையில் உரையாற்றிய மம்தா பானர்ஜி, 2012ம் ஆண்டை ஒப்பிடுகையில் மேற்கு வங்கத்தில் இப்போது பாலியல் குற்றங்கள் 3.1 சதவிகிதம் குறைந்துள்ளது என்று கூறியுள்ளார். மேலும், மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் மேற்கு வங்கத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் புகார்கள் மிகவும் குறைவு என்று கூறியுள்ளதோடு, புள்ளி விவரமும் அளித்துள்ளார்.

அதாவது டெல்லியில் 556 பாலியல் புகார்களும், மும்பையில் 232 புகார்களும், பெங்களூருவில் 90 புகார்களும், சென்னியில் 94 புகார்களும் பதிவாகியிருந்தாலும், கொல்கத்தாவில் வெறும் 68 வழக்குகள் பதிவாகியுள்ளன என்றும் கூறியுள்ளார்.

0 Responses to மேற்குவங்கத்தில் பாலியல் புகார்கள் குறைவு!:மம்தா பானர்ஜி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com