மார்ச் 8 ஆம் திகதி மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து சீனத் தலைநகர் பீஜிங் நோக்கிச் சென்று கொண்டிருந்த போது நடுவானில் மாயமான மலேசியன் ஏர்லைன்ஸ் இன் MH370 விமானம் இந்து சமுத்திரத்தில் விழுந்து நொறுங்கியிருக்கலாம் எனப் பெரும்பாலும் கருதப் படும் போதும் இவ்விமானம் மறைந்து 3 மாதங்களாகியும் இதுவரை ஒரு சிறிய துப்புக் கூடக் கிடைக்கவில்லை.
மேலும் உலகில் காணாமல் போன விமானம் ஒன்றுக்கான அதிகம் செலவழிக்கப் பட்ட தேடுதலாக இவ்விமானம் குறித்த சர்வதேசத்தின் தேடுதல் மாறியுள்ளதுடன் இத்தேடல் நடவடிக்கை இன்னமும் தொடர்கின்றது. இந்நிலையில் மாயமான MH370 விமானம் குறித்து நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த ஈவான் வில்சன் மற்றும் ஜெப் டெய்லர் என்ற இரு எழுத்தாளர்கள் தாம் எழுதி வெளியிட்டுள்ள "Good Night Malaysian 370: The truth behind the loss of Flight 370" என்ற புத்தகத்தில் அவ்விமானம் விபத்தில் சிக்கவில்லை. அது முன்பே திட்டமிடப்பட்டு சரியாகக் கணிக்கப் பட்டு நடத்தப் பட்டுள்ளது என்ற பரபரப்புத் தகவலை வெளியிட்டுள்ளனர்.
இந்த எழுத்தாளர்களில் ஒருவரான ஈவான் வில்சன் வர்த்தக விமானியும் ஹாமில்டன் நகரக் கவுன்சிலரும் ஆவார். மற்றையவரான ஜெப் டெய்லர் வைகாடோ டைம்ஸ் பத்திரிகையின் செய்தியாளர் ஆவார். இவர்கள் தமது புத்தகத்தை எழுதுவதற்கு முன் மலேசியாவுக்குப் பயணித்து அதிகாரிகள் மற்றும் பயணிகளின் குடும்ப உறுப்பினர்களைச் சந்தித்துப் பேட்டி எடுத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. மலேசிய அரசு உண்மையைத் தெரிவிக்கத் தைரியம் இல்லாமல் இருக்கின்றது என இவர்கள் கூறுகின்றனர்.
இதேவேளை ஜூன் மத்தியில் சீன இராணுவக் கப்பல் மற்றும் நெதர்லாந்து சர்வே கப்பல் ஆகியவை Mh370 விமானத்தின் அடுத்த கட்ட தேடுதல் நடவடிக்கையை ஆரம்பிப்பதாக அறிவிப்பு விடுத்துள்ள வேளையில் விமானம் குறித்த இப்புத்தகம் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

0 Responses to MH370 விமானம் விபத்தில் சிக்கவில்லை! அது திட்டமிடப்பட்டது!: நியூசிலாந்து எழுத்தாளர்கள் பரபரப்புத் தகவல்