தமிழகம் முழுவதும் இன்று காலை மற்றும் பகல் காட்சிகளை திரை அரங்குகள் ரத்து செய்துள்ளது.
அதிமுக பொது செயலாளருக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் சிறைத்தண்டனை வழங்கியதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, தமிழகம் முழுவதும் உள்ள திரை அரங்குகளில் காலை மற்றும் இரவுக் காட்சிகள் கிடையாது என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும், ஜெயலலிதாவுக்கு ஆதரவாக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தமிழ் திரையுலகமே இணைந்து உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர். இன்று படகாட்சிகள் மட்டும் ரத்து என்றில்லாமல், படப்பிடிப்புக்காட்சிகளும் ரத்தாகியுள்ளது.
சின்னத்திரை தயாரிப்பாளர்கள் மற்றும் கலைஞர்களும் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்துக்கொள்ள உள்ளனர் என்றும், 5 ஆயிரம் பேருக்கு மட்டுமே சேப்பாக்கம் மைதானத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றும் தெரிய வருகிறது. இதற்காக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பாதுகாப்புக்கு என்று போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் நடைப்பெறும் காட்சிகளை ஜெயலலிதா சிறை வளாகத்தில் உள்ள தொலைக்காட்சியில் கண்டு வருகிறார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.நேற்று குலுங்கி குலுங்கி அழுதபடி பதவி ஏற்பு விழாவில் முதல்வர் உட்பட அமைச்சர்கள் பதவி ஏற்றுக்கொண்ட நிகழ்ச்சியையும் ஜெயலலிதா தொலைக்காட்சியில் கண்டுள்ளார்.

0 Responses to தமிழகம் முழுக்க இன்று திரைக் காட்சிகள் ரத்து!