ஜெயலலிதா மற்றும் அவரது தரப்பு மூவர் உள்ளிட்டவர்கள் ஜாமீன் மனுக்களை சாரணைக்கு எடுத்துக்கொண்டது பெங்களூரு உயர் நீதிமன்றம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
ஜெயலலிதா தண்டனையை ரத்து செய்ய வேண்டும், ஜெயலலிதா உள்ளிட்ட நால்வருக்கும் ஜாமீன் வழங்க வேண்டும் என்று, பெங்களூரு உயர் நீதிமன்றத்தின் விடுமுறைக்கால அமர்வு முன்பு, மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத் மலானி மனுத் தாக்கல் செய்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த மனுக்களை பெங்களூரு உயர் நீதிமன்ற விடுமுறைக்கால அமர்வு நீதிபதிகள் விசாரணைக்கு எடுத்துக்கொண்டனர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால், இந்த மனுக்களின் மீதான விசாரணை நடைபெறும் திகதிகள் குறித்த அறிவிப்பு இன்னமும் வெளியாகவில்லை.அனேகமாக நாளை இந்த மனுக்களை நீதிபதிகள் விசாரிப்பார்கள் என்றும் தகவல் தெரிய வருகிறது. ஜெயலலிதா உள்ளிட்ட அனைவர் சார்பாகவும் வாதிடப் போவது ராம்ஜெத் மலானிதான் என்றும் அதிமுக அலுவலகக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

0 Responses to ஜெயலலிதா தரப்பு ஜாமீன் மனுக்களை பெங்களூரு உயர் நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது?