அதிமுக பொது செயலாளர் ஜெயலலிதாவின் ஜாமீன் மனு உள்ளிட்ட மனுக்கள் மீதான விசாரணையை பெங்களூரு உயர் நீதிமன்றம் வருகிற திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்துள்ளது.
நேற்று ஜெயலலிதா தரப்பில் வழக்கறிஞர் ராம்ஜெத் மலானி ஜெயலலிதா உள்ளிட்டவ்ரகளுக்கு ஜாமீன் மனு மற்றும் ஜெயலலிதாவின் தண்டனையை ரத்து செய்யக் கோரும் மனுவைத் தாக்கல் செய்தார். அந்த மனுவை நேற்று பெங்களூரு உயர் நீதிமன்றத்தின் விடுமுறைக்கால அமர்வு நீதிமன்றம் விசாரணைக்கு
எடுத்துக் கொண்டது. அந்த மனு இன்று விசாரணைக்கு வரும் என்று எதிர்ப்பார்த்த நிலையில், ராம்ஜெத் மலானி நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்தார். ஆனால், மனுவின் மீதான விசாரணையை வருகிற திங்கட் கிழமைக்கு ஒத்தி வைப்பதாக பெங்களூரு உயர் நீதிமன்ற நீதிபதிகள் அறிவித்துள்ளனர்.
வருகிற நாட்களில் ஜெயலலிதாவின் தண்டனைக்கு எதிராகவும், ஜாமீன் கேட்டும் வாதாட உள்ளவர் ராம்ஜெத் மலானிதான் என்கிறப் பட்சத்தில், இவருக்கு எதிராக அரசு தரப்பு வழக்கறிஞர் பவானி சிங் வாதாட உள்ளதாகவும், ஜாமீனுக்கு ஒருபோதும் வழிவிடப் போவதில்லை என்றும் அவர் கூறியதாகத் தகவல்
வெளியாகியுள்ளது.

0 Responses to ஜெயலலிதாவின் ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு!