Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சுவிசில் உணர்வெழுச்சியுடன்  தமிழீழ விடுதலையின் தடை அகற்றிகள் நினைவு சுமந்த வணக்க நிகழ்வு வெகு சிறப்பாக இடம்பெற்றது.

இந்திய வல்லாதிக்கத்திற்கெதிராக அகிம்சைப் போரில் விதையான தியாகதீபம் லெப்.கேணல் திலீபன், இலங்கை இந்திய அரசுகளின் கூட்டுச் சதிக்குப் பலியான லெப். கேணல் குமரப்பா, லெப். கேணல் புலேந்திரன் உட்பட பன்னிரு வேங்கைகள், முதல் களப்பலியான பெண் போராளி 2ம் லெப். மாலதி, சிறிலங்கா அரசின் சதியால்  படுகொலை செய்யப்பட்ட லெப். கேணல் நாதன், கப்டன் கஜன் மற்றும் கேணல் சங்கர், கேணல் ராயூ ஆகியோரோடு தென்தமிழீழத்தின் மட்டுமண்ணில் முதல் களப்பலியான மாவீரர் லெப். பரமதேவா அவர்களினதும் 30 வது ஆண்டு நினைவுகள் சுமந்த எழுச்சி நிகழ்வானது 28.09.2014 ஞாயிற்றுக்கிழமை அன்று பாசெல் மாநிலத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரின் ஏற்பாட்டில் நடைபெற்ற இவ் வணக்க  நிகழ்வில் பொதுச்சுடரேற்றலுடன் தமிமீழத் தேசியக்கொடிஏற்றி வைக்கப்பட்டதனைத் தொடர்ந்து ஈகைச்சுடர் ஏற்றி அகவணக்கம் செலுத்தபட்டு, உறுதிமொழியுடன் மலர்வணக்கம் செலுத்தப்பட்டது. மக்களால் மலரஞ்சலி செலுத்தப்பட்ட சமவேளையில் சிறுவர்களாலும், இளையோர்களாலும் எழுச்சிப் பாடல்களும் இசைக்கப்பட்டன.

மாவீர வித்துக்களின் நினைவுகள் சுமந்த இவ்வணக்க நிகழ்வின் எழுச்சி நிகழ்வுகளாக எழுச்சிப் பாடல்கள்,  இளையோர்களின் எழுச்சி நடனங்கள், மற்றும் காலத்திற்கேற்ப கருப்பொருளை கொண்ட சிறப்புரையோடு தமிழீழ விடுதலையின் தடை அகற்றிகளின்  வரலாற்றுப் பதிவுகள் அகன்ற வெண்திரையில் காண்பிக்கப்பட்டமைநிகழ்வின் சிறப்பம்சமாக அமைந்திருந்தது.

நீண்ட காலங்களுக்குப் பிறகு பாசெல் மாநிலத்தில் நடைபெற்ற இவ்வெழுச்சி நிகழ்வில் பல நூற்றுக்கணக்கான மக்கள் கலந்துகொண்டமையானதுமீள்எழுச்சியுடன், மிகவும் உணர்வுபூர்வமாகவும், நம்பிக்கையைத் தருவதாகவும் அமைந்திருந்தது.

நிகழ்வின் இறுதியாக நம்புங்கள் தமிழீழம் பாடலைத் தொடர்ந்து தமிழீழத் தேசியக்கொடி இறக்கலுடன், தமிழர்களின் தாரக மந்திரத்துடன் நிகழ்வுகள் எழுச்சியுடன் நிறைவுபெற்றன.

0 Responses to சுவிசில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தமிழீழ விடுதலையின் தடை அகற்றிகள் நினைவு சுமந்த வணக்க நிகழ்வு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com