Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

காணாமற்போனோர் தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுத்து வரும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அமர்வு இடம்பெறும் கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலக பகுதிகளிலிருந்து இராணுவத்தினர் அகற்றப்பட்டுள்ளனர்.

சாட்சியம் அளிக்கவரும் பொதுமக்களுக்கு இராணுவத்தினரால் அச்சுறுத்தல் விடுக்கப்படலாம் என்ற குற்றச்சாட்டுக்கள் பொதுமக்களினால் வைக்கப்பட்டதை அடுத்தே ஜனாதிபதி ஆணைக்குழு அதிகாரிகளினால் இராணுவத்தினர் அங்கிருந்து அகற்றப்பட்டுள்ளனர்.

கடந்த 27, 28 ஆகிய திகதிகளில் முழங்காவில் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற இந்த சாட்சியமளிக்கும் நிகழ்வுகள், நேற்று திங்கட்கிழைமை பூநகரியில் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது, பூநகரி பிரதேச செயலக வளாகத்தைச் சூழ, இராணுவத்தினரும், இராணுவ புலனாய்வாளர்களும் அதிகளவில் நடமாடித்திரிந்தனர். இதனால் அச்சம் கொண்ட மக்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகளிடம் இது தொடர்பில் முறையிட்டனர்.

இதனையடுத்து, துரித நடவடிக்கை மேற்கொண்ட ஆணைக்குழுவின் அதிகாரிகள், அங்கு நின்றிருந்த இராணுவத்தினருடன் கலந்துரையாடி அங்கிருந்த அவர்களை அகற்றினர். இதனைத் தொடர்ந்து, சாட்சியமளிக்கும் நிகழ்வுகள் இடம்பெற்றது. பூநகரி பிரதேச செயலகத்தில் சாட்சியமளிப்பதற்கு 8 கிராம அலுவலர் பிரிவுகளைச் சேர்ந்த 50 பேர் நேற்று அழைக்கப்பட்டிருந்தனர்.

0 Responses to ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை இடம்பெறும் பகுதிகளிலிருந்த இராணுவம் அகற்றம்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com