Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமை கட்டுக்குள் உள்ளது என்று அரசு தரப்பு வழக்கறிஞர் சோமயாஜு, சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது என்றும், இதைக் கட்டுக்குள் வைக்க உத்தரவிட வேண்டும் என்றும் டிராஃபிக் ராமசாமி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விடுமுறை காலம் என்றும் பாராமல் அவசரமாக விசாரணைக்கு எடுத்துக்கொண்ட விடுமுறைக்கால அவசர அமர்வு
நீதிபதிகள், அரசு தரப்பு வழக்கறிஞரிடம் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு நிலைமைக் குறித்துக் கேள்வி எழுப்பினர்.

சோமயாஜு காஞ்சீபுரத்தில் பேருந்து எரிக்கப்பட்ட சம்பவர்த்தில் 7 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர் என்றும், தாராபுரம் பேருந்து எரிப்பு
சம்பவத்தில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் கூயுள்ளார். மேலும், சென்னை ராயப்பேட்டைப் பகுதியில் இப்போது ஆண்டு வரும் கட்சியினரும், முன்பு ஆண்ட கட்சியினரும் வன்முறையில் ஈடுப்பட்டதால், இரு தரப்பினர் மீதும் 13 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றும் சோமயாஜு கூறினார்.

ஆனால், சட்டம் ஒழுங்கு நிலமைக் குறித்த நேரடியான அறிக்கையை பாராமல் தீர்ப்பு அளிக்க முடியாது என்றும், வருகிற 6ம் திகதிக்குள் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு நிலைக் குறித்த அறிக்கையைத் தமிழக அரசுத் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.

0 Responses to தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமை கட்டுக்குள் உள்ளது: அரசு வழக்கறிஞர்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com