செல்வி ஜெயலலிதாவின் கைதினையடுத்து எல்லைதாண்டிய இந்திய மீனவர்களது தொழில் நடவடிக்கைகள் குறைவடைந்துள்ளதாக ஒட்டுக்குழு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் பழைய பூங்கா வளாகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள தேசிய ரீதியிலான வலைப்பந்து, கரப்பந்து, கூடைப்பந்தாட்ட மைதானங்களுக்கான சிரமதானப் பணியை ஆரம்பித்து வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தமிழ் நாட்டு மக்களுக்கு ஜெயலலிதா அதிகமான சேவைகளை செய்துள்ள போதிலும், அவர் மீதான குற்றச்சாட்டுக்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளபடியால் அந்த மக்களுக்கான முன்னேற்றங்கள் தடைப்பட்டிருக்கலாமேயொழியே, இலங்கை தமிழர்களை பொறுத்தவரையில் அது இன்னும் முன்னேற்றகரமாகத்தான் இருக்கும் என்று நம்புகிறேன்.
எல்லை தாண்டிய தமிழ் நாட்டு மீனவர்கள் எமது கடற்பரப்பினுள் வந்து தொழில் செய்வதனால் எம்முடைய கடற்தொழிலாளர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருகின்றது.
அதுமட்டுமன்றி இவ்வாறு எல்லை தாண்டிய அவர்களது தொழில் நடவடிக்கைகளால் எமது கடல் வளமும் சூறையாடப்படுகின்றன.
இந்நிலையில் ஜெயலலிதாவின் கைதுக்கு பின்னர் தமிழக மீனவர்கள் எல்லைதாண்டி வருவது உடனடியாக நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிகின்றதென்றும் சுட்டிக்காட்டினார்.

0 Responses to ஜெயலலிதாவின் கைதினையடுத்து மீனவர்களின் அத்துமீறல் குறைந்துள்ளதாம்!: ஒட்டுக்குழு அமைச்சர்