Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தாச்சி விளையாட்டு பார்த்துவிட்டு வந்த இளைஞர்கள் மூவர் இனம் தெரியாதவர்களின் வாள்வெட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 7.00 மணியளவில் இடம் பெற்ற வாள்வெட்டில் காயப்பட்ட மூவரும் பொது மக்களின் உதவியுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மயக்கமுற்ற நிலையில் மேலதிக சிகிச்சைக்காக இருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு உடனடியாக நோயாளர் காவு வண்டி மூலம்; அனுப்பப்பட்டுள்ளார்கள்.

குறிப்பிட்டவர்களை இரண்டு; மோட்டார் சையிக்கிளில் வந்த நால்வர் கொண்ட ஒரு குழவினர் வெட்டிவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக  வழிப்போக்கர்கள் தெரிவிக்கின்ற போதிலும் குறிப்பி;ட்ட வாள்வெட்டுக்கான காரணங்கள் இது வரை தெரிய வரவில்லை.

இந் நிலையில் தாச்சி விளையாட்டு பார்த்துவிட்டு வந்தவர்களே வாள்வெட்டுக்கு உள்ளாகியதாகவும் இதில் மல்லாகம் நீதிமன்ற வீதியைச் சோந்த சந்திரசேகரம் கொலின்ஸ் வயது 20, தேவராசா ஜெகநாதன் வயது 23, யாழ்ப்பாணம் போதனா வைத்திசாலை அவசர சிகிச்சைப் பிரிவிலும் மற்றும் சுன்னாகம் சபாபதிப்பிள்ளை வீதி கண்ணகி முகாமைச்சேர்ந்த சின்னராசா யூட்அன்ரன்p 23 வயது  தெல்லிப்பளை வைத்திசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

மற்றுமொருவர் வாள்வெட்டுக் குழுவினால் வெட்ட விரட்டப்பட்ட போதிலும் சிறிய காயத்துடன் தப்பிச் சென்றுள்ளார். தெல்லிப்பளை பொலிசார் விசாரனைகளை மேற்க்கொண்டுளார்கள்.

0 Responses to தாச்சி விளையாட்டைப் பார்த்து வீடு திரும்பிய மூவர் மீது வாள் வெட்டு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com