2015 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டம் இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசின் ஜனாதிபதியும், நிதியமைச்சருமான மஹிந்த ராஜபக்ஷவினால் வரும் 24ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
வரவு- செலவுத் திட்ட முன்மொழிவுகள் மீதான இரண்டாம் வாசிப்பு ஒக்டோபர் மாதம் 25ஆம் திகதி சனிக்கிழமை முதல் ஒக்டோபர் 30ஆம் திகதி வரை நடைபெறும். பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்திலேயே மேற்கண்ட முடிவு எட்டப்பட்டுள்ளது.
வரவு-செலவுத் திட்டம் மீதான குழுநிலை விவாதம் ஒக்டோபர் 31ஆம் திகதி முதல் நவம்பர் 18ஆம் திகதி வரை ஞாயிற்றுக்கிழமை மற்றும் அரச விடுமுறை நாட்கள் தவிர மற்றைய அனைத்து நாட்களிலும் நடைபெறும். வரவு-செலவுத் திட்டம் மீதான இறுதி வாக்கெடுப்பு நவம்பர் மாதம் 19ஆம் திகதி மாலை 06.00 மணிக்கு நடத்தப்படும்.
வழமையான பாராளுமன்ற அமர்வு, பிற்பகல் 01.30 மணிக்கு ஆரம்பமாகி இரவு 07.00 மணிக்கு நிறைவடையும். ஆனால், வரவு-செலவுத் திட்டம் நிறைவடையும் வரை பாராளுமன்ற அமர்வு முற்பகல் 09.30 மணிக்கு ஆரம்பமாகி இரவு 07.00மணிவரையும் நடைபெறும்.
பாராளுமன்ற அமர்வின் முதல் ஒரு மணித்தியாலம் வாய்மொழி மூலமான கேள்விகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்பின்னர் வரவு-செலவுத் திட்டத்துக்கான விவாதம் ஆரம்பிக்கப்படும். வரவு-செலவுத் திட்ட விவாதத்தின் முடிவில், ஒத்திவைப்பு வேளை பிரேரணைகளுக்காக அரை மணித்தியாலம் ஒதுக்கப்படும் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.

0 Responses to 2015 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டம்; ஒக்டோபர் 24ஆம் திகதி சமர்ப்பிப்பு!