Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மராட்டியம் மற்றும் ஹரியானாவில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் பிரதமர் நரேந்திர மோடி, மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே ஆட்சி நிலவ வேண்டும் என்று பேசியுள்ளார்.

ஹரியானாவில் மக்கள் மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவு அளித்ததைப்போல, சட்டப்பேரவைத் தேர்தலில் ஆதரவு அளிப்பார்கள் என்கிற நம்பிக்கை தமக்கு உள்ளதாக மோடி மராட்டிய மாநிலத் தேர்தல் பிரச்சாரத்தில் கூறியுள்ளார். அதே போன்று மராட்டிய மக்களும் ஊழல் ஆட்சிக்கு விடைக்கொடுக்க பாஜகவை ஆதரிக்கத் தயாராக இருப்பதாகவும், குறிப்பாக இளைஞர்களிடையே இதுக்குறித்த எழுச்சி அதிகமாகி, பாஜகவை அவர்கள் ஆதரிக்கத் தொடங்கியுள்ளனர் என்றும் அவர் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.

எப்போதும் மத்தியில் ஆளும் ஆட்சி மாநிலத்திலும் ஆட்சி செய்யும்போது மக்களுக்கு நன்மைகள் எளிதில் சென்றடையும் என்றும், மாநிலமும் அனைத்து விதத்திலும் வளர்சிக் காண மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே ஆட்சி நிலவ வேண்டயது அவசியம் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

0 Responses to மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே ஆட்சி நிலவ வேண்டும்: மோடி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com