Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மஹிந்த ராஜபக்ஷவினால் இன்று வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 2015ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் துண்டு விழும் தொகை 512 பில்லியன் ரூபாவாக கணக்கிடப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டுக்கான மொத்த வருமானமாக 1689 பில்லியன் ரூபாவாகவும், மொத்த செலவீனமாக 2210 பில்லியன் ரூபாவாகவும் இருக்குமென்று வரவு செலவுத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட வரவு செலவுத் திட்ட உரையில் உள்ளடக்கப்பட்டவை அம்சங்கள் சில:

1. நாட்டின் அனைத்துப் பகுதி மக்களுக்கும் 2017ஆம் ஆண்டுக்குள் குழாய் நீர் விநியோகம்.

2. முன்றாயிரத்துக்கும் மேற்பட்ட முன்னாள் விடுதலைப் புலிகள் அரச படைகளில் இணைக்கப்பட்டுள்ளார்கள்.

3. வடக்கு நோக்கிய அதிவேக பாதை உள்ளிட்ட அனைத்து அதிவேக பாதைகளும் 2018ஆம் ஆண்டுக்குள் நிறைவு.

4. மலேரியா நோய் இல்லாத நாடாக இலங்கையை மாற்றியிருக்கின்றமை.

5. வெளிநாடுகளிலிருந்து வரும் உல்லாசப் பிரயாணிகளின் எண்ணிக்கை இந்த வருடம் 11 இலட்சத்தை தாண்டியுள்ளது.
6. ஆடைத்துறை ஏற்றுமதித்துறை 15 வீதத்தால் வளர்ச்சியடைந்திருக்கிறது.

7. நிபுணத்துவம் மிக்கவர்கள் வெளிநாட்டுக்கு தொழிலுக்காக செல்வோரின் எண்ணிக்கையில் அதிகரிப்பு; பணிப்பெண்களாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்வோரின் எண்ணிக்கையில் வீழ்ச்சி.

8. 2020 ஆம் ஆண்டில் பல்கலைக் கழகத்துக்கு வருடாந்தம் 1 இலட்சம் மாணவர்களை இணைத்துக்கொள்ளும் திட்டம்.

9. 2020 இல் உயர் தொழில்நுட்பம் நிறைந்த நாடாக இலங்கையை மாற்றுவோம். தகவல் தொழில்நுட்பத் துறையில் 1 இலட்சம் பேருக்கு தொழில் வாய்ப்பு.

10. 2020 இல் ஏற்றுமதி வருமானத்தை 20 பில்லியன் டொலர்களாக உயர்த்துதல்.

11. 2020 சுற்றுலாத் துறையில் 5 பில்லியன் வருமானம் ஈட்டும் துறையை மாற்றுதல்.

12. 2020 இல் தனிநபர் வருமானம் 7500 டொலர்கள்

13. முதல் 25 அலகுகளுக்கான நீர் கட்டணம் 10 வீதம் குறைப்பு

14. 2015ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் சீனாவுடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை; இதன்மூலம் பெருமளவிலான வேலைவாய்ப்புகளை ஏற்படுத்த உத்தேசம்

15. சிறுநீரக நோயை இல்லாதொழிக்க நீரை சுத்தப்படுத்தும் உபகரணங்களை விநியோகிக்கத் திட்டம். இந்நோயால் பாதிக்கப்பட்டோருக்கு மாதாந்தம் 3 ஆயிரம் வழங்கத் திட்டம்.

16. கர்ப்பிணிகளுக்கு ஆரோக்கியமான ஆகாரம் மற்றும் முன்பள்ளி மாணவர்களின் காலை உணவுக்கு 500 மில்லியன்

17. சுகததாச, கெத்தாராம விளையாட்டரங்குகளை அபிவிருத்தி செய்வதற்கு 2250 மில்லியன் ஒதுக்கீடு

18. அரச ஊழியர்களுக்குமான வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவு 2200 ஆக அதிகரிப்பு.

0 Responses to 2015ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் துண்டு விழும் தொகை 512 பில்லியன் ரூபாய்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com