Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது பதவிக்காலம் 2016ஆம் ஆண்டே நிறைவுக்கு வருகின்றது. ஆகவே, அடுத்த ஜனாதிபதித் தேர்தல் 2016ஆம் ஆண்டே நடத்தப்பட வேண்டும் என்று முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா தெரிவித்துள்ளார்.

2016ஆம் ஆண்டிற்கு முன்னர் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படுமாயின், அது சர்வாதிகார ஆட்சிக்கு வித்திடுவதாக அமையும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

நிறைவேற்று அதிகார முறைமையை ஒழித்து ஜனநாயகத்தை நிலைநாட்டும் இலக்குக் கொண்ட அனைத்துச் சக்திகளுடனும் ஒன்றுபட்டு செயற்படத்தயார் இருப்பதாகவும் முன்னாள் பிரதம நீதியரசர் கொழும்பு ஊடகமொன்றிடம் தெரிவித்துள்ளார்.

பதவியில் இருக்கும் ஜனாதிபதி ஒருவர் அடுத்த ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்காக நான்கு வருட முடிவில் தீர்மானிக்கலாம் என்பதை அரசியல் அமைப்பு பிரிவு 31(3A) மிக தெளிவாக குறிப்பிடுகின்றது. ஆனால், 31(3A)(D) பிரிவானது சத்தியப் பிரமாணம் செய்த நாளில் இருந்து ஆறு வருடங்களுக்கு அந்த பதவியின் காலம் என குறிப்பிடப்பட்டுள்ளது. 18வது திருத்த சட்டத்தின் 31 (2) பிரகாரம் தற்போதைய ஜனாதிபதி மூன்றாவது முறை போட்டியிட தகுதியற்றவர் என்று சரத் என் சில்வா மேலும் குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to அடுத்த ஜனாதிபதித் தேர்தல் 2016ஆம் ஆண்டே நடத்தப்பட வேண்டும்: சரத் என் சில்வா

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com